ரெண்டு ஹாலிவுட் படத்த கலந்து அடிச்சிருக்காங்க!.. படம் மொத்தமும் பட்டி டிங்கரிங்தான் போல..!
Vidamuyarchi : தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் இன்று உலகம் எங்கும் வெளியாகி இருக்கின்றது. இந்த திரைப்படத்தை எதிர்பார்த்து அஜித் ரசிகர்கள் கடந்த இரண்டு வருடங்களாக காத்திருந்தார்கள்.
மகிழ் திருமேனி இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, ஆரவ், அர்ஜுன், ரெஜினா உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கின்றார். தமிழகத்தில் இந்த திரைப்படத்தை ரெட் ஜெயின்ட் நிறுவனம் மொத்தம் 1000 திரையரங்குகளில் வெளியிட்டு இருக்கின்றது.
விடாமுயற்சி ரிலீஸ்: கடந்த பொங்கல் பண்டிகைக்கு விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் கடைசி நேரத்தில் பொங்கல் ரேஸில் இருந்து விலகியது. விடாமுயற்சி திரைப்படம் பிரேக் டவுன் என்கின்ற திரைப்படத்தின் தழுவல் என்பது அனைவருக்கும் தெரியும்.
ஆனால் இந்த திரைப்படத்தை தயாரித்த பாராமென்ட் நிறுவனத்திடம் சரியாக காப்பிரைட் உரிமையை வாங்காததால் அந்த நிறுவனம் 150 கோடி நஷ்ட ஈடு கேட்டிருந்தது. அதன் பிறகு பேச்சு வார்த்தை நடத்தி லைக்கா நிறுவனம் படத்தின் லாபத்தில் பங்கு கொடுப்பதாக ஒப்புக்கொண்டு படத்தை இன்று ரிலீஸ் செய்து இருக்கின்றது.
விடாமுயற்சி விமர்சனம்: விடாமுயற்சி திரைப்படம் இன்று உலகம் எங்கும் வெளியான நிலையில் அனைத்து தரப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. தொடர்ந்து படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றது. இரண்டு வருடங்களுக்கு பிறகு அஜித் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி இருப்பதால் படத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகிறார்கள்.
அஜித் நடிப்பு, கார் பைட் சீன், அஜித் மற்றும் த்ரிஷாவின் காதல் காட்சிகள் என அனைத்துமே படத்தில் மிகச் சிறப்பாக இருப்பதாக தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றது. இருப்பினும் ஒரு சிலர் படத்தின் கதை சுவாரசியமாக இல்லை, படம் முழுக்க பேசிக் கொண்டே இருக்கிறார்கள் என்று கூறி வருகிறார்கள்.
2 ஹாலிவுட் படத்தின் ரீமேக்: விடாமுயற்சி திரைப்படம் பிரேக் டவுன் என்கின்ற திரைப்படத்தின் தழுவல் என்பது படம் தொடங்கிய சிறிது நாட்களிலேயே தெரிந்துவிட்டது. அதனை உறுதி செய்யும் வகையில் மகிழ் திருமேனி படத்தின் மூலக்கதை என்னுடையது அல்ல என்பதையும் சமீபத்தில் ஒப்புக்கொண்டார். இந்நிலையில் இன்று படம் பார்த்த ரசிகர்கள் பலரும் இது பிரேக் டவுன் படத்தின் தழுவல் மட்டுமல்ல மற்றொரு ஹாலிவுட் படத்தின் தழுவலும் கூட என்று கூறி வருகிறார்கள்.
அதாவது பிரேக் டவுன் திரைப்படத்தின் பாதியையும், லாஸ்ட் சீன் அலைவ் என்கின்ற மற்றொரு ஹாலிவுட் படத்தின் பாதியையும் இணைத்து இந்த திரைப்படத்தை பட்டி டிங்கரிங் செய்திருக்கிறார்கள். இரண்டு படத்தையும் சேர்த்து விடாமுயற்சி என்கின்ற பெயரில் படத்தை எடுத்து வைத்திருக்கின்றார் மகிழ் திருமேனி என சமூக வலைதள பக்கங்களில் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.