கவுண்டமணியின் ஒத்த ஓட்டு முத்தையா… ஹிட்டடித்த டிரெய்லர்… எப்படி இருக்கு தெரியுமா?
Goundamani: நடிகர் கவுண்டமணி பல ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்கும் ஒத்த ஓட்டு முத்தையா படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் இப்படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்டும் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
கவுண்டமணி மற்றும் செந்தில் உள்ளிட்டோருக்கு 70க்கும் அதிகமான படங்களுக்கு நகைச்சுவை வசனங்கள் எழுதி ஹிட்டடித்தவர் சாய் ராஜகோபால். அவர் எழுதி இயக்கும் திரைப்படம் தான் ஒத்த ஓட்டு முத்தையா. இப்படத்தில் கவுண்டமணி ஹீரோவாக நடிக்கிறார்.
அவருடன் யோகி பாபு, சித்ரா லட்சுமணன், சிங்க முத்து மற்றும் நொட்டை ராஜேந்திரன் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்தின் எந்தவித வசனங்களும் யாரையும் கேலி செய்யாமல் நகைச்சுவைக்காக மட்டுமே உருவாக்கப்பட்டு இருக்கிறது.
சினி கிராப்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் ரவிராஜா தயாரித்து இருக்கும் இப்படத்திற்கு சித்தார்த் விபின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் அரசியலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் அதிலும் கலகலப்பாக ரசிக்கும்படி உருவாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் டிரெய்லர் விழாவில் கவுண்டமணி பேசிய போது, என்னுடைய நண்பர் கதையை சொன்னதை பிடித்து போய் இதில் நடித்தேன். இதை சரியாக இயக்கிய இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. என்னுடைய ரசிகர்களுக்கு நன்றி. இந்த விழாவுக்கு வந்த வராத ரசிகர்கள்க்கும் நன்றி, ஹாலிவுட் ரசிகர்களுக்கும் நன்றி எனக் கலகலப்பாக குறிப்பிட்டார்.
வரும் பிப்ரவரி 14ந் தேதி வெளியாகும் இப்படம் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. பொதுவாக தற்போது ரசிகர்கள் பழைய காமெடியை விரும்புவதால் இப்படம் வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.