கேரவனில் இருக்கும்போது அது நடந்தது!.. அங்கு அழமுடியவில்லை!.. தமன்னா பகீர்!...
tamannah
Tamannah: கல்லூரி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் தமன்னா. மும்பையை சேர்ந்த இவர் ஹிந்தியில் வாய்ப்பு கிடைக்காமல் தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடிக்கப் போனவர். முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை கொடுத்திருந்தார். ஆனால், அப்படம் ஓடவில்லை.
தமிழ் தெலுங்கு: 18 வருடங்களாக திரைத்துறையில் இருக்கிறார். சினிமா, மாடலிங் இரண்டிலும் இவருக்கு ஆர்வம் உண்டு. தமன்னாவின் தோல் நிறம் ரசிகர்களுக்கு பிடித்த ஒன்று. அதனால்தான் அவரை ‘மில்க் பியூட்டி’ என அழைக்கிறார்கள். இந்த 18 வருடங்களில் பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துவிட்டார்.
முன்னணி நடிகர்களுக்கு ஜோடி: விஜய், அஜித், விக்ரம், சூர்யா, கார்த்தி, தனுஷ், சிம்பு, ஜெயம் ரவி, விஷால் என எல்லா நடிகர்களுடனும் நடித்திருக்கிறார். ரஜினிக்கு ஜோடியாக நடிக்கவில்லை என்றாலும் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த ஜெயிலர் படத்தில் ‘காவாலா’ பாடலுக்கு குலுங்க குலுங்க நடனமாடி ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு காட்டினார்.
ஜெயிலர் காவாலா: ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு அந்த பாடலும் ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. ராஜவுமலியின் பாகுபலி படத்தில் நடித்ததால் பேன் இண்டியா நடிகையாக மாறி பாலிவுட்டுக்கும் போனார். ஆனால், அங்கு அவர் நடித்தது எல்லாமே கிளுகிளுப்பான படுக்கையறை காட்சிகள் கொண்ட வெப் சீரியஸ்தான்.
அது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வெளியாகி காஜி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. திரைத்துறையில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் அதிகமாக இருக்கும். சிலர் அதை வெளியே சொல்வார்கள். சிலர் வெளியே சொன்னால் வாய்ப்பு கிடைக்காது என சொல்லாமல் இருந்து விடுவார்கள்.
பாலியல் தொல்லை: அந்தவகையில் தமன்னாவும் தான் சந்தித்த பாலியல் தொல்லை பற்றி பேசியிருக்கிறார். ‘கேரவனில் நான் இருந்தபோது பிடிக்காத ஒன்று நடந்தது. அப்போது எனக்கு ஷூட்டிங் இருந்தது. அதனால் அந்த இடத்தில் என்னால் அழக்கூட முடியவில்லை. அப்போது நான் என்னிடம் ‘இது ஒரு உணர்ச்சி மட்டுமே. இதை நான் கட்டுப்படுத்த வேண்டும்’ என்று மட்டும் சொல்லிக்கொண்டேன்’ என பேசியிருக்கிறார்.