விடாமுயற்சி ரிலீஸ் இந்த தேதியில இல்லையா?.. இதுக்கு பின்னாடி இப்படி ஒரு செண்டிமெண்ட்டா!..

By :  Ramya
Update: 2024-12-26 14:30 GMT

ajith

விடாமுயற்சி: நடிகர் அஜித் நடிப்பில் வரும் பொங்கலுக்கு வெளியாவதற்கு தயார் நிலையில் இருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படம் திரையரங்குகளின் வெளியானது. அதனை தொடர்ந்து எந்த அஜித் திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாகவில்லை. துணிவு திரைப்படத்தை முடித்த கையோடு நடிகர் அஜித் கமிட்டான திரைப்படம் தான் விடாமுயற்சி.

லைக்கா நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கியிருக்கின்றார். மேலும் அனிருத் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கின்றார். ஒரே நாளில் நடக்கும் கதையை மையமாக வைத்து இப்படத்தை இயக்கி வந்தார்கள். படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் படமாக்கப்பட்டு வந்த நிலையில் அங்கு ஏற்பட்ட கால சூழ்நிலை காரணமாக படப்பிடிப்பு தொடர்ந்து தள்ளிப்போகி படத்தை முடிப்பதற்கு இவ்வளவு காலம் எடுத்துக் கொண்டது.


இதற்கிடையில் நடிகர் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி அப்படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்து விட்டது. இந்த திரைப்படம் தான் முதலில் பொங்கலுக்கு ரிலீசாக கூறப்பட்டு வந்த நிலையில் விடாமுயற்சி திரைப்படத்தின் ரிலீஸ் காரணமாக குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸை மே மாதத்திற்கு தள்ளி வைத்திருக்கிறார்கள்.

அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விடாமுயற்சி திரைப்படத்தின் விடுபட்ட காட்சிகள் அனைத்தும் எடுத்து முடிக்கப்பட்டு டப்பிங் பணியையும் தற்போது முடித்து இருக்கின்றார் நடிகர் அஜித். போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் இப்படத்தின் சிங்கிள், டீசர், ட்ரெய்லர் என அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

நாளை இந்த திரைப்படத்திலிருந்து அனிருத் இசையில் உருவாகி இருக்கும் சாவடிக்க பாடல் வெளியாகும் என கூறப்படுகின்றது. ஏற்கனவே இந்த திரைப்படத்தை ஜனவரி 10ஆம் தேதி அதாவது பொங்கலுக்கு நான்கு நாட்களுக்கு முன்பு ரிலீஸ் செய்வதற்கு படக்குழுவினர் திட்டமிட்டு இருந்தார்கள். ஆனால் தற்போது இந்த திரைப்படம் அந்த தேதியில் வெளியாக போவதில்லையாம்.

அதாவது ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் தினத்தன்று இந்த திரைப்படத்தை வெளியிடுவதற்கு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகின்றது. அதற்கு காரணம் ஓவர் சீஸில் படத்தின் சென்சாரை இன்னும் முடிக்காமல் இருந்து வருகிறார்கள். ஓவர் சீஸில் தற்போது கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால் அனைவருமே விடுமுறையில் இருந்து வருகிறார்கள். இதனால் அங்கு சென்சார் நடைபெறுவதில் சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.

அதன் காரணமாக படம் ஜனவரி 10-ம் தேதிக்கு பதிலாக 14-ம் தேதிக்கு தள்ளிவைப்பதற்கு படக்குழுவினர் முடிவு செய்து இருக்கிறார்கள். இதற்கு மற்றொரு செண்டிமெண்ட் காரணமும் இருக்கின்றதாம். அதாவது லைக்கா நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு தர்பார் திரைப்படத்தை இயக்கியிருந்தார்கள். அந்த திரைப்படத்தை ஜனவரி 9ம் தேதி ரிலீஸ் செய்திருந்தார்கள். ஆனால் படம் ப்ளாப் ஆனது.


ஆனால் அதற்குப் பிறகு அதே வருடம் 14ஆம் தேதி வந்த பட்டாசு திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. அதனால் தற்போது ஏன் ஆசைப்பட்டு முன்பே படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் பொறுமையாக 14 ஆம் தேதி ரிலீஸ் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்து இருக்கிறார்களாம். தற்போது வெளியான போஸ்டரில் பொங்கல் ரிலீஸ் என்பதே இடம்பெறவில்லை. அதனால் இதற்கு பின்னால் இவ்வளவு காரணங்கள் இருக்கின்றது என்று சினிமா விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.

Tags:    

Similar News