அரசு ஹோட்டலை விலைக்கு கேட்ட விக்னேஷ் சிவன்!.. காசு நிறையா இருக்கா பாஸ்!...
புதுச்சேரியில் உள்ள அரசு ஓட்டலை நயன்தாராவின் கணவரும், இயக்குனருமான விக்னேஷ் சிவன் விலைக்கு கேட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
இயக்குனர் விக்னேஷ் சிவன்:
தமிழ் சினிமாவில் போடா போடி என்கின்ற திரைப்படத்தின் மூலமாக தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் விக்னேஷ் சிவன். முதல் திரைப்படம் அந்த அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும் இரண்டாவது திரைப்படம் அவரின் திரை வாழ்க்கைக்கும், தனிப்பட்ட வாழ்க்கைக்கும் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.
தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தை இயக்கினார் விக்னேஷ் சிவன். இப்படத்தின் மூலம் கிடைத்த வெற்றி இவரை ஒரு முன்னணி இயக்குனராக மாற்றியது. மேலும் இந்த திரைப்படத்தில் நடித்த நயன்தாராவை காதலித்து வந்தார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.
நயன்தாராவின் கணவர்:
இருவரும் பல வருடங்கள் காதலித்து வந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு சென்னை மகாபலிபுரத்தில் மிகப் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்திற்கு கோலிவுட் தொடங்கி பாலிவுட் வரை பல பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்தது.
திருமணத்திற்கு பிறகு ஜாலியான தம்பதிகளாக உலா வந்த இவர்கள் வாடகை தாய் மூலமாக இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தனர். தற்போது குழந்தைகள் மற்றும் மனைவி நயன்தாராவுடன் ஊர் ஊராக சுற்றி வருகின்றார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.
விக்னேஷ் சிவன் படங்கள்:
நயன்தாராவை திருமணம் செய்து கொள்வதற்கு முன்னதாக காத்து வாக்குல இரண்டு காதல் என்கின்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இப்படம் நல்ல வெற்றியை கொடுத்தது. அதனைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதனை வைத்து lik என்கின்ற திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இந்த திரைப்படமும் தற்போது ஒரு சில பிரச்சனைகளால் டேக் ஆஃப் ஆகாமல் இருந்து வருகின்றது.
பிசினஸ்:
நயன்தாராவும் சரி அவரது கணவர் விக்னேஷ் சிவனும் சரி திரையுலகில் இருந்தாலும், மறுபக்கம் பிசினஸிலும் கல்லாகட்டி வருகிறார்கள். நயன்தாரா ஏற்கனவே அழகு சாதன பொருட்கள், நாப்கின் போன்ற பொருட்களை விற்பனை செய்து வருகின்றார். அதேபோல் விக்னேஷ் சிவனும் பிசினஸ் செய்து வருவதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் அடுத்த கட்டமாக ஹோட்டல் பிசினஸில் களமிறங்கி இருக்கிறார்கள் போல நேற்று இரவு மணிக்கு சொகுசு காரில் புதுச்சேரிக்கு வந்த விக்னேஷ் சிவன் புதுச்சேரி மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனை சந்தித்து ஓட்டல் தொழில் ஆரம்பிப்பது குறித்து பேசி இருக்கின்றார்.
அப்போது கடற்கரை சாலை அருகில் உள்ள ஒரு ஓட்டலை அதுவும் அரசுக்கு சொந்தமான ஓட்டலை விலைக்கு கிடைக்குமா என்று கேட்டிருக்கின்றார். இதை கேட்ட லட்சுமி நாராயணன் ஒரு நிமிடம் ஆடிப் போய்விட்டாராம். இது அரசுக்கு சொந்தமான ஹோட்டல் என்று கூறியும் சரி ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆவது வாடகைக்கு தருவீர்களா என்று கேட்டாராம். அதற்கும் முடியாது என்று மறுத்து இருக்கின்றார் அமைச்சர். இந்த செய்தி தற்போது இணையத்தில் வெளியாக பலரும் விக்னேஷ் சிவனை கிண்டல் செய்து வருகிறார்கள்.