சைடு பிசினஸில் கல்லாகட்டும் இயக்குனர்கள்!.. வெங்கியும் விக்கியும் செய்ற வேலைய பாருங்க..!
தமிழ் சினிமாவில் இயக்குனர்கள் இயக்கத்தை தாண்டி சைடு பிசினஸ்களும் கல்லா கட்டி வருகிறார்கள்.
இந்தியாவில் இருக்கும் நடிகர், நடிகைகள் பலரும் தாங்கள் சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை அனைத்தையும் பல பிசினஸ்களில் முதலீடு செய்து வருகிறார்கள். அதற்கு காரணம் ஒருவேளை தங்களது மார்க்கெட் குறையும் சமயத்தில் பட வாய்ப்புகள் இல்லாத சமயத்தில் பிசினஸ் மூலமாக வரும் வருமானத்தை வைத்து பிழைத்துக் கொள்ளலாம் என்பதுதான் கணக்கு.
இந்திய சினிமாவில் இருக்கும் பலரும் சினிமாவை தாண்டி ஏகப்பட்ட பிசினஸ்களை செய்து வருகிறார்கள். தமிழ் சினிமாவிலும் அப்படித்தான், தமிழ் சினிமாவில் பல நடிகர், நடிகைகள் ஹோட்டல்கள், திருமணம் மண்டபங்கள், ரெஸ்டாரன்ட்கள், தங்கும் விடுதிகள், டப்பிங் ஸ்டுடியோ என பல பிசினஸ்களில் முதலீடு செய்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து வாழ்ந்து வருகிறார்கள்.
90'ஸ் காலகட்டத்தில் இருந்த பல நடிகைகள் தற்போது பல பிசினஸ்கள் செய்து வருவது பலருக்கும் தெரிந்த விஷயம் தான். சிம்ரன், சினேகா தொடங்கி தற்போது நயன்தாரா, திரிஷா வரை பலரும் பல பிசினஸ்களில் முதலீடு செய்து சினிமாவை தாண்டி சம்பாதித்து வருகிறார்கள். நடிகைகள் மட்டுமில்லாமல் நடிகர்களும், இசையமைப்பாளர்களும், இயக்குனர்களும் தற்போது பல பிசினஸ்களை தொடங்கி நடத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் இயக்குனர் வெங்கட் பிரபு சேர்த்து வைக்கும் பணத்தை செலவு செய்யாமல் நீண்ட காலத்திற்கு தங்களுக்கு வரவு வரக்கூடிய வகையில் இன்வெஸ்ட்மென்ட் செய்து வருகின்றார். ஈசிஆரில் கடற்கரை ஓரமாக இரண்டு டப்பிங் ஸ்டுடியோ ஒன்றை வைத்து நடத்தி வரும் வெங்கட் பிரபு அதற்கு புதிதாக ஒளியும் ஒலியும் என்கின்ற பெயரை வைத்து வெற்றிகரமாக நடத்தி வருகின்றார். சமீபத்தில் புஷ்பா 2 திரைப்படத்தின் தமிழ் டப்பிங் கூட இந்த ஸ்டூடியோவில் தான் நடைபெற்றது என்று கூறி வருகிறார்கள்.
பல டப்பிங் தியேட்டர்கள் காத்து வாங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அட்வான்ஸ் டெக்னாலஜியை இந்த டப்பிங் ஸ்டூடியோவில் வைத்திருப்பதால் பலரும் வெங்கட் பிரபு டப்பிங் ஸ்டுடியோக்கு தான் படையெடுத்து வருகிறார்கள். இதனால் வெங்கட் பிரபுவுக்கு நல்ல வருமானம் வந்து கொண்டிருக்கின்றது.
இவர் ஒரு புறம் இருக்க நயன்தாராவின் கணவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவனும் புதிதாக தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் செய்யாத ஒரு விஷயத்தை பிசினசாக செய்து வருகின்றார். செலிபிரிட்டி மேனேஜ்மென்ட் என்பது ஒரு மிகப்பெரிய பிசினஸ். ஒரு ஆர்டிஸ்ட்டின் கால்ஷீட்டை தனிநபர் பார்த்துக் கொண்டிருந்தார். அதனை தொடர்ந்து மேனேஜர், செகரட்டரி போன்றவர்கள் கவனித்து வந்தார்கள்.
ஆனால் பிற மொழிகளில் தற்போது நிறுவனங்களே செய்து கொண்டிருக்கின்றது. தெலுங்கு சினிமாவில் நடிகர் ராணா இது சம்பந்தமாக ஒரு நிறுவனத்தை வைத்து நடத்திக் கொண்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் முதன்முதலாக விக்னேஷ் சிவன் இது போன்ற ஒரு நிறுவனத்தை தொடங்கி இருக்கின்றார். இதன் மூலமாக சிறிய நடிகர்கள் தொடங்கி பெரிய நடிகர்கள் வரை அனைவருக்கும்மான கால்ஷீட் சம்பந்தமான விஷயங்களை இந்த நிறுவனம் கவனித்து வருகின்றது.
சமீபத்தில் நயன்தாராவின் டாக்குமென்டரி வெளியாகி இருந்தது. அதில் கூட அந்த நிறுவனத்தின் பெயரை குறிப்பிட்டு இருந்தார்கள். டார்க் டேலண்ட் என்கின்ற நிறுவனத்தை வைத்து இது போன்ற விஷயங்களை கவனித்து வருகின்றாராம் விக்னேஷ் சிவன். இப்படி தமிழ் சினிமாவில் இருக்கும் பல பிரபலங்கள் சைடு பிசினஸிலும் நல்ல பணம் பார்த்து வருகிறார்கள்.