அஜீத் கொந்தளித்தது ஏன்? இப்பத் தானே தெரியுது...! பிரபலம் சொல்லும் பகீர் பின்னணி
சமீபத்தில் அஜீத் தனது ரசிகர்களுக்கு வெளியிட்ட அறிக்கைக் குறித்து பிரபல வலைப்பேச்சாளர் பிஸ்மி சில தகவல்களைத் தெரிவித்துள்ளார். என்னன்னு பார்க்கலாமா...
கோஷம்
'கடவுளே அஜீத்தே' என்ற கோஷம் கடந்த சில நாள்களாகவே வைரலாகி வருகிறது. இது அஜீத்துக்கு ரொம்ப பிடிக்கும்னு நினைச்சித் தான் இதை செய்து இருப்பார்கள் என நினைக்கிறேன். நேற்று அஜீத் வெளியிட்ட அறிக்கையைப் பார்த்ததும் தான் தெரிந்து இருக்கும். பொது இடங்களில் தேவையில்லாமல் அநாகரிகமாக எழுப்பப்படும் இந்தக் கோஷம் என்னைக் கவலை அடையச் செய்துள்ளதுன்னு குறிப்பிட்டுள்ளார்.
அஜீத்தே கடவுளே
இவர்களது செயல் அஜீத்தை எரிச்சல் அடையச் செய்துள்ளது. அதனால் தான் என் வேண்டுகோளை ஏற்று உடனடியாக இதை செயல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். அதனால் தான் கடவுளேன்னு கூட அவர் எழுதல. தன்னை அப்படி குறிப்பிட்டு எழுதணும்னு கூட அவர் விரும்பல. அதனால் தான் 'க' என்று போட்டு புள்ளி புள்ளியாக வைத்து இருப்பார்.
ஆனால் அஜீத் ஆரம்பத்தில் அதைக் கண்டிக்காமல் இன்றைக்கு வெளியிட என்ன காரணம்? அப்படின்னு ஒரு கேள்வி எழுந்தது. ஆரம்பத்தில் அதைக் கவனிக்காமல் விட்டாருன்னா சிறிது நாள்களில் அதை நிறுத்தி விடுவார்கள் என்று எண்ணி இருந்துள்ளார். ஆனால் அது ஒரு ட்ரெண்டாக மாறி உள்ளது. தொடர்ந்து இதுபோன்ற கோஷங்கள் எழுப்பப்பட்ட பிறகு தான் அது அஜீத்தைக் கவலை அடையச் செய்துள்ளது.
சாமியே ஐயப்பா
குறிப்பாக பல்லடம் என்ற ஊரில் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் ஒரு வேனில் போய்க் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் 'சாமியே ஐயப்பா'ன்னு கோஷம் போட்டுக்கிட்டுப் போயிருக்காங்க. அந்த வேனுக்கு இணையாக 2வீலரில் சென்ற அஜீத் ரசிகர்கள் 'கடவுளே அஜீத்தே'ன்னு கோஷம் எழுப்பியபடி சென்று இருக்கிறார்கள்.
இந்த விஷயம் அஜீத்தின் கவனத்துக்குப் போயிருக்கு. அதுக்குப் பிறகு டிடிவி தினகரன் கூட்டத்தில் மாணவர்கள் 'கடவுளே அஜீத்தே'ன்னு சொல்லிருக்காங்க. எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு சம்பவம் நடந்தது.
கூனி குறுகி இருந்த சுரேஷ் சந்திரா
சமீபத்தில் கங்குவா படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் ஒரு கல்லூரி வளாகத்தில் நடந்தது. அந்தப் படத்தின் பிஆர்ஓ தான் அஜீத்தின் மேனேஜர். அப்போது திடீர்னு கடவுளே அஜீத்தேன்னு கோஷம் எழுப்பிருக்காங்க. அப்போ மேடையில் இருந்த சுரேஷ் சந்திராவின் முகத்தை சூர்யா பார்த்துருக்காரு. அவரு கூனி குறுகி இருந்துருக்காரு.
அஜீத்துக்கு பார்வேர்டு
அந்தப் பார்வையின் அர்த்தத்தை அவர் புரிந்து கொண்டார். அதைத் தனக்கு ஏற்பட்ட அவமானமாக அவர் புரிந்து கொண்டார். அப்படி பல இடங்களில் நடந்த சம்பவத்தை வீடியோவாக அஜீத்துக்கு பார்வேர்டு பண்ணிருக்காங்க. அதனால அவர் உடனடியாக இதை நிறுத்தி ஆகணும்னு நினைச்சித் தான் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். அஜீத்தைப் பொருத்தவரை அவரது ரசிகர்களை விட பெரிதும் மதிப்பது பொதுமக்களைத் தான். அவர்களுக்கு எந்த விதத்திலும் இடையூறாக இருக்கக்கூடாதுன்னு நினைப்பவர்.
திருத்த முடியாது
எனக்கு திடீர்னு சினிமாவே வேணாம்னு சொல்லிட்டு வேற தொழிலை நான் பார்த்தாலும் இந்த மக்கள் என் மீது மிகுந்த அன்பையும், மரியாதையும் காட்டுவாங்கன்னு அடிக்கடி சொல்வாராம். அதனால் அஜீத் ரசிகர்கள் இனியாவது திருந்த வேண்டும். இவர்களது செயலால் தான் அவமானமாக உணர்வதாக அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இதன்பிறகும் ரசிகர்கள் அதே காரியத்தைத் தொடர்வது அநாகரிகம். இதன்பிறகும் ரசிகர்கள் திருந்தவில்லை என்றால் உங்களை யாராலும் திருத்த முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.