விஜய் செய்யாததை ரஜினி செஞ்சிட்டாரே..! சொல்லி அடிக்கும் கில்லியா கூலி?
இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் முதல் முறையாக ரஜினி நடிக்கும் படம் கூலி. நீண்ட இடைவெளிக்குப்பிறகு சத்யராஜூம், ரஜினியுடன் இணைந்துள்ளார். நாகர்ஜூனா, அமீர்கான், உபேந்திரா, சௌபின் சாகிர், சுருதிஹாசன் என பெரிய நட்சத்திரப்பட்டாளமே நடித்துள்ளது. அனிருத் இசை அமைத்துள்ளார். இந்தப் படம் வரும் ஆகஸ்டு 14ல் வெளியாகிறது. இப்போது இருந்தே படத்துக்கான ஹைப் எகிற ஆரம்பித்துவிட்டது. படத்தைப் பற்றிய சுவாரசியமான சில தகவல்களை மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு சொல்கிறார். வாங்க பார்க்கலாம்.
லோகேஷ் கனகராஜ் கூலி படத்துக்காக 2 வருஷம் கடின உழைப்பைப் போட்டுருக்காராம். இந்தப் படத்துக்காக செல்போன் கிடையாது. உறவினர் வீடுகளுக்குச் செல்லவில்லை. சகோதரியின் குழந்தை பிறந்ததுக்குக்கூட போகலயாம். இந்தப் படத்துக்காக 50 கோடி சம்பளம் வாங்கினாராம். ரஜினி படத்தோட டபுள் பாசிடிவ் பார்த்துட்டு தளபதி படம் பார்க்கும்போது என்ன மாதிரி ஃபீல் பண்ணினேனோ அதே ஃபீல் வருதுன்னு சொன்னாராம். எனக்கு இது முக்கியமான படம்னு லோகேஷ் சொல்லி இருக்கிறாராம்.
லியோ 600 கோடி கலெக்ட் பண்ணிருக்கு. அதனாலதான் இன்னைக்கு 50கோடி சம்பளம் வாங்கிருக்கேன். அந்தப் படத்துல செகண்ட் ஆஃப்புக்கு நெகடிவ் கமெண்ட்ஸ் வந்ததுக்குக் காரணம் ரிலீஸ் டேட் முடிவு பண்ணினதுதான். எப்பவுமே அதை டைரக்டர்தான் முடிவு பண்ணனும். ஆனால் அந்தப் படத்துல ரிலீஸ் டேட் சொல்லிட்டு அதுக்குள்ள முடிக்கச் சொல்லி நெருக்கடி வந்தது.
அதனால தான் எனக்கு பெரிய அழுத்தமாச்சு. எதையாவது கட்டிக் கொடுய்யான்கற சூழலுக்கு வந்தாச்சு. அதுல ஒரு கிரியேட்டர் அடிபட்டுப் போறான். ஆனா இந்தப் படத்துல எனக்கு ரஜினி முழுசுதந்திரம் கொடுத்தாரு. அதனாலதான் இன்னைக்கு வரைக்கும் இறங்கி வேலை செய்ய முடியுது. ரஜினி 70நாளுக்கு மேல கால்ஷீட் கொடுக்க மாட்டாரு.
இந்தப் படத்துக்கு 200 நாள் கொடுத்துருக்காருன்னா அது முழுக்க முழுக்க டைரக்டர் மேலும், ஸ்கிரிப்ட் மேலும் வைத்த நம்பிக்கைதான் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு. இந்தப் படத்தில் நடிக்க 10 நிமிடத்தில் சத்யராஜ் ஓகே சொன்னாராம். நாகர்ஜூனாவுக்கு வில்லன் கேரக்டர். அவருக்கு ஓகே சொல்ல 7 மாசம் ஆச்சுதாம்.