விஜயோடு தனி விமானத்தில் சென்ற ராஜேந்திரன் யார்? பிரபலம் வெளியிட்ட அப்டேட்…
விஜயின் கோவா பயணம்தான் தற்போதைய ட்ரெண்டாகி இருக்கிறது.
Vijay: நடிகர் விஜய் சில நாட்களாகவே தொடர்ச்சியாக வைரலாகி வந்த நிலையில் தற்போது ஒரு சிக்கலிலும் சிக்கி இருக்கிறார்.. இது குறித்த அப்டேட்கள் ஒவ்வொன்றாக தற்போது இணையங்களில் கசிந்து வருகிறது.
நடிகர் விஜய் அரசியலுக்குள் எண்ட்ரி கொடுத்ததில் இருந்தே அவர் குறித்து பேச தினமும் ஒரு விஷயம் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. கட்சி அறிவிப்பு, கொடி அறிமுகம், முதல் மாநில மாநாடு என கலைக்கட்டி கொண்டிருந்தது தமிழக வெற்றி கழகத்தின் எண்ட்ரி.
இதனால் நடிகர் விஜய் என்ற அடையாளம் மொத்தமாக மாறி தற்போது அவரை அரசியல் தலைவராக பார்க்கும் பலரின் கண்ணோட்டம் உருவாகி இருக்கிறது. இந்நிலையில் தன்னுடைய சக நடிகை ஆன கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு நடிகர் விஜய் கோவா சென்றதாக தகவல்கள் வெளியானது.
அங்கிருந்து பட்டு வேட்டி சட்டையில் விஜயின் புகைப்படங்களும் இணையதளத்தில் கசிந்தது. அதில் என்ன பிரச்சனை என யோசிக்கும் போது அவருடன் நடிகை திரிஷாவும் இணைந்து தனி விமானத்தில் பயணித்தது தற்போது மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது.
இது குறித்து மற்ற ரசிகர்கள் விஜயின் மீது நிறைய குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், நடிகர் விஜயின் ரசிகர்கள் இது குறித்து ஜெகதீஷ் உடனே விளக்கம் அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க அந்த விமானத்தில் நடிகர் விஜய் உடன் சென்ற ராஜேந்திரன் என்பவர் குறித்தும் தற்போது சர்ச்சை ஒன்று கிளம்பி இருக்கிறது.
ராஜேந்திரன் பாஜகவை சேர்ந்தவர் என்றும், அவர்தான் தனி விமானத்தை விஜயிற்காக ஏற்பாடு செய்து கொடுத்தது எனவும் பல விஷயங்கள் கசிந்து வருகிறது. ஆனால் இவர் பாஜகவை சேர்ந்தவர் இல்லை என்பதை தற்போது பிரபல திரை விமர்சகர் பிஸ்மி தன்னுடைய எக்ஸ் வலைதளம் மூலம் ஆதாரங்களுடன் வெளியிட்டிருக்கிறார்.
இது குறித்து அவர் வெளியீட்டிற்கும் பதிவில், விஜய்யோடு தனி விமானத்தில் கோவா சென்ற ராஜேந்திரன் என்பவர் பாஜகவை சேர்ந்தவர் என்றும், அவர்தான் தனி விமானத்தை ஏற்பாடு செய்தவர் என்றெல்லாம் வடை சுட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
உண்மையில் விஜயுடன் விமானத்தில் சென்ற ராஜேந்திரன் யார் தெரியுமா?
கிட்டத்தட்ட 35 வருடங்களாக விஜய் வீட்டில் டிரைவராக பணியாற்றுபவர்.
தற்போது விஜய்யின் பர்சனல் டிரைவர். விஜய் எங்கு சென்றாலும் ராஜேந்திரனையே உடன் அழைத்துச் செல்வார்.
அந்தவகையில்தான் கோவா செல்லும்போதும் ராஜேந்திரன் விஜயுடன் சென்றார். இது தெரியாமல் கதைவிட்டுக்கிட்டிருக்காங்க என குறிப்பிட்டு இருக்கும் பிஸ்மி விஜய், ஜெகதீஷையும் டேக் செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.