கடைசிப் படம் இப்படியா இருக்கணும்!. ஐடியா இல்லாத விஜய்!.. மிஸ் பண்ணிட்டாரே!...
Thalapathy 69: தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் விஜய். 200 கோடி அளவுக்கு இவரின் சம்பளம் இருக்கிறது. ஆனால், இதையெல்லாம் விட்டுவிட்டு அரசியலுக்கு போயிருக்கிறார். விஜய்க்கு அரசியல் சரிபட்டு வருமா என்பதைதெல்லாம் இனிமேல்தான் பார்க்க வேண்டும். ஏனெனில், விஜய் அரசியலுக்கு போனது புலி வாலை புடித்த கதையாக இருக்கிறது.
பனையூரை தாண்டா பாலிடிக்ஸ் என அவரை பலரும் கலாய்க்கும் அளவுக்கே அவரின் அரசியல் செயல்பாடுகள் இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு மழையால் பாதிக்கப்பட்ட கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் போன்ற பகுதிகளுக்கு மக்களுக்கு ஆறுதல் சொல்லக் கூட விஜய் செல்லவில்லை.
மாறாக அதில் பாதிக்கப்பட்ட சிலரை தனது பனையூர் அலுவலகத்திற்கு வரவழைத்து நிவாரண பொருட்களை கொடுத்தார். ஆனால், நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணத்திற்கு தனி விமானம் மூலம் கோவாவுக்கு பறந்து போனார். இதைத்தொடர்ந்து இந்த இரண்டு விஷயங்களையும் ஒப்பிட்டு பலரும் விஜயை கடுமையாக விமர்சனம் செய்தார்கள்.
ஆனால், விஜய் எதற்கும் விளக்கமளிக்கவில்லை. வழக்கம்போல் மவுனமாகவே இருக்கிறார். விஜய் இப்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இது அவரின் 69வது படமாகும். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ள நிலையில் இந்த படமும் அரசியலோடு தொடர்புபடுத்தி எடுக்கப்பட்டிருக்கும் என விஜயின் ரசிகர்கள் நினைக்கிறார்கள்.
ஆனால், இது தெலுங்கில் பாலையா நடித்து ஹிட் அடித்த ‘பகவந்த் கேசரி’ படத்தின் ரீமேக் என சொல்லப்படுகிறது. நமது கடைசிப் படம் ஒரு பக்கா மசாலா படமாக அமைந்து ஹிட் அடிக்க வேண்டும் என நினைத்தே விஜய் இந்த கதையை தேர்ந்தெடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
அப்படி இல்லாமல் கேம் சேஞ்சர் போல ஒரு அரசியல் கதையில் விஜய் நடித்திருந்தால் கண்டிப்பாக அடுத்த வருடம் நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கு பிரச்சாரம் போல அமைந்திருக்கும். அந்தவகையில் யோசித்தால் விஜய் அதை மிஸ் பண்ணிவிட்டார் என்றே தோன்றுகிறது.