தக் லைஃப் புரோமோஷன்.. எங்க படம் வெளியானதே தெரியல! விஜய்சேதுபதி ஆதங்கம்
thuglife
விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் படம் ஏஸ். படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல ஒரு வரவேற்பை பெற்று வருகிறது. மகாராஜா திரைப்படத்திற்கு பிறகு இந்த படத்தின் மூலமும் விஜய் சேதுபதிக்கு ஒரு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மகாராஜா திரைப்படத்திற்கு முன்பு வரை அவர் வில்லனாகவே பல படங்களில் நடித்து மாஸ் காட்டி வந்தார்.
மகாராஜாவின் வெற்றி அடுத்தடுத்து ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. அதற்கு அடுத்தபடியாக மிஷ்கின் இயக்கத்திலும் ட்ரெயின் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஏஸ் திரைப்படத்தைப் பற்றி விஜய் சேதுபதி கூறும் பொழுது இந்த படம் வெளியானதே இன்னும் நிறைய பேருக்கு தெரியவில்லை. அது எங்களுடைய தப்புதான்.
சில பல நெருக்கடிகளால் நாங்கள் உடனடியாக படத்தை ரிலீஸ் பண்ண வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டோம். இருந்தாலும் மக்கள் மத்தியில் இருந்து இந்த படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களே வந்து கொண்டிருக்கின்றது. கமல், சிம்பு போன்ற பெரிய நடிகர்கள் நடிக்கும் தக் லைப் படத்தின் ப்ரோமோஷனுக்கே 25 நாட்கள் தேவைப்படுகிறது என்று ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார் விஜய் சேதுபதி.
இவர் சொல்வதிலிருந்து கமல் போன்ற பெரிய நடிகர்களுக்கு 25 நாட்கள் ப்ரமோஷனுக்கு தேவைப்படுகிறது என்றால் என்னை மாதிரியான அடுத்த நிலை நடிகர்களுக்கு புரோமோஷனுக்கான நாட்கள் இன்னும் எத்தனை தேவைப்படும் என்பதைப் போல அவர் பேசியிருக்கிறார். இருந்தாலும் இவருடைய தன்னடக்கத்தை அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.
ace
இவரும் தமிழ் சினிமாவில் ஒரு மதிக்கத்தக்க போற்றத்தக்க ஒரு பெரிய நடிகர் தான். அதையெல்லாம் மறந்து சிம்புவையும் பெரிய நடிகர் என்று குறிப்பிட்டது ரசிகர்கள் மத்தியில் விஜய் சேதுபதி மீது இன்னும் ஒரு பெரிய மரியாதையை ஏற்படுத்தி இருக்கிறது.