எந்த hair-அ பத்தி கேக்குறீங்க? பப்லு கேட்டதுக்கு விஜய்சேதுபதி கொடுத்த தரமான பதில்

By :  ROHINI
Update: 2025-05-22 15:37 GMT

vijaysethupathi

விஜய் சேதுபதி நடிப்பில் ஆறுமுக குமார் எழுதி இயக்கும் திரைப்படம் ஏஸ். இந்த படத்தை 7சிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, அவினாஷ் மற்றும் பப்லு பிரித்திவிராஜ் ஆகியோர் நடிக்கின்றனர். இது விஜய் சேதுபதிக்கு 51வது திரைப்படம். இது நாளை ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் படத்தை பற்றி பல சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார் விஜய் சேதுபதி.

சமீப காலமாகவே வில்லன் வேடங்களில் நடித்து புகழ்பெற்ற விஜய் சேதுபதி மகாராஜா திரைப்படத்தில் லீடு ரோலில் நடித்து மிகப்பெரிய வெற்றி அடைந்ததை ஒட்டி மீண்டும் ஹீரோவாக படங்களில் நடிக்க தொடங்கினார். அந்த வகையில் இப்போது ஏஸ் திரைப்படம் வெளியாக இருக்கிறது. ஏற்கனவே மிஸ்கின் இயக்கத்தில் ட்ரெயின் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

தொடர்ந்து பல படங்களில் நடித்து பிசியாக இருக்கும் விஜய் சேதுபதி தமிழ் மட்டுமல்ல பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். முதன்முறையாக விஜய் சேதுபதி மற்றும் பப்லு பிரிதிவிராஜ் இந்த படத்தின் மூலம் இணைந்துள்ளனர். இந்த நிலையில் படத்தின் ப்ரோமோஷனில் கலந்து கொண்டு பேசிய போது தொகுப்பாளினி ஒருவர் உங்களுடைய ஹேர் பற்றிய ரகசியம் என்ன என்ற ஒரு கேள்வியை கேட்டனர்.

அதற்கு பிரித்திவிராஜ் யாரிடம் கேட்கிறீர்கள். என்னிடமா இல்லை அவினாஷிடமா என கேட்க அதற்கு தொகுப்பாளினி முதலில் நீங்கள் சொல்லுங்கள். உங்களுடைய முடியின் ரகசியம் என்ன என கேட்டார். உடனே பப்லு பிருதிவிராஜ் நீங்கள் எந்த ஹேரை பற்றி கேட்கிறீர்கள் என்ற ஒரு கேள்வியை கேட்டதும் தொகுப்பாளினிக்கு ஷாக் ஆகிவிட்டது. உடனே இடையில் குறிக்கிட்டு பேசிய விஜய் சேதுபதி பிரித்விராஜை பார்த்து ‘தலைமுடியின் ரகசியத்தை பற்றி கேட்டால் உங்களிடம் கேட்பார். தாடியின் ரகசியத்தை பற்றி கேட்டால் அவினாஷிடம் பற்றி கேட்பார்.

இப்பொழுது அந்த கேள்வி உங்களை பார்த்து கேட்கிறார் என்றால் உங்கள் தலைமுடியை பற்றி தானே கேட்பார்’ என சொன்னதும் பப்லு பிரித்திவிராஜ் அப்படியே சிரித்து சமாளித்து விட்டார். பிரித்திவிராஜை பொறுத்த வரைக்கும் அவர் மீது வைக்கப்பட்ட தொடர் விமர்சனங்களை நாம் பார்த்து வருகிறோம். ஏற்கனவே முதல் மனைவியை பிரிந்து இரண்டாவது அவருடைய காதலியுடன் லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார்.

avinash

அதன் பிறகு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மாறி மாறி இருவரும் சமூக வலைதளங்களில் கடுமையான வாதத்தை முன் வைத்தனர். இப்போது தனியாக வாழும் பப்லு தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். முன்னதாக அவர் பேட்டிகளில் பேசும்பொழுது தன்னுடைய காதலியுடன் இருக்கும் பொழுது மிகவும் வெளிப்படையாக ரிலேஷன்ஷிப்பை பற்றி பேசியவர். அதுவே மக்களுக்கு ஒரு வித முக சுழிப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News