படமே ரிலீஸ் ஆகல.. அதுக்குள்ள இப்படி பண்றாங்களே.. விஜய்சேதுபதி மகனை இப்படி பண்ணலாமா?
surya
தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நடிகராக கருதப்படுபவர் நடிகர் விஜய் சேதுபதி. சிறு சிறு வேடங்களில் நடிக்க தொடங்கி இன்று ஒரு தவிர்க்க முடியாத நடிகராக மாறி இருக்கிறார். தமிழ் மட்டுமல்ல தெலுங்கு ஹிந்தி என மற்ற மொழிகளிலும் இவருக்கு என ஒரு தனி மரியாதையே இருக்கிறது. ஹிந்தியிலும் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. ஹீரோவாக நடித்து மக்கள் மத்தியில் தனி கவனம் பெற்ற விஜய் சேதுபதி வில்லனாகவும் தன்னுடைய பங்களிப்பை ஆற்றினார். கமல் ரஜினி என மிகப் பெரிய ஆளுமைகளுக்கு வில்லனாக நடித்து தனக்கென ஒரு தனி இடம் பிடித்துக் கொண்டார்.
தற்போது மீண்டும் ஹீரோவாக படங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் ஹீரோவாக நடித்து மாபெரும் வெற்றி அடைந்த திரைப்படம் மகாராஜா. அந்த படத்திற்கு பிறகு தொடர்ந்து ஹீரோவாகவே நடித்து வருகிறார். இந்த நிலையில் அவருடைய மகன் சூர்யா விஜய் சேதுபதியும் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்து இருக்கிறார். அவர் ஹீரோவாக நடித்து வெளியாக கூடிய திரைப்படம் பீனிக்ஸ். இந்த படம் வரும் ஜூலை நான்காம் தேதி திரைக்கி வரவிருக்கின்றது. இதனுடைய ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த விழாவிற்கு திரை பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு சூர்யா விஜய் சேதுபதியை வாழ்த்தினார்கள். அப்போது விஜய் சேதுபதியும் தன் மகனுக்காக கலந்து கொண்டு அவருடைய கருத்துக்களையும் பகிர்ந்து இருந்தார் .இந்த நிலையில் சூர்யா விஜய் சேதுபதி பேசிய ஒரு கிளிம்ப்ஸ் வீடியோவை எடுத்து நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர் .விஜய் சேதுபதியை டேக் செய்து சூர்யா சேதுபதியின் பாடி லாங்குவேஜ் பார்க்கவே நன்றாக இல்லை. அவர் பேசும் விதமும் யாரையும் ஈர்க்கவில்லை.
நீ சினிமாவில் நடித்து பெயர் சம்பாதித்து வருகிற பணத்தை சூர்யா சேதுபதிக்கு கொடுத்து வேற துறையிலாவது அவரைப் போகச் சொல்லுங்கள் .சினிமா ஃபீல்டு அவருக்கு செட் ஆகாது என கடுமையாக விமர்சித்து இருக்கின்றனர். இதுபோன்ற இந்த நெகட்டிவ் விமர்சனங்கள் தான் படம் ரிலீஸ் ஆன பிறகு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது. ஒருவரை உருவ கேலி செய்வதற்கு முன் அவரின் திறமை என்ன என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.
surya
சூர்யா சேதுபதிக்கு இதுதான் முதல் திரைப்படம் .அதுவும் ஹீரோவாக நடிக்கும் முதல் திரைப்படம். திரையில் அவர் எப்படிப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் என்பதை கூட பார்க்காமல் விழாவில் அவர் பேசியதை வைத்து நெட்டிசன்கள் இவ்வாறு கமெண்ட் அடித்து வருகின்றனர்.