எல்லா படத்துலயும் கிண்டல் பண்ணாங்க.. தனுஷ் மட்டும்தான் அத செய்யல! ஃபீல் பண்ணிய நடிகை
dhanush
தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். இவர் மீது சினிமாத் துறையில் ஒரு நல்ல மரியாதை இருந்து வருகிறது. அதற்கேற்ப இவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதாபாத்திரங்கள் சமீபகாலமாக மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. குறிப்பாக அசுரன் திரைப்படத்திற்கு பிறகே தன்னுடைய நடிப்பில் புது ஸ்டைலை கொண்டு வந்திருக்கிறார் தனுஷ்.
தன்னுடைய நடிப்பில் நேர்த்தியும் பல வகையான யுத்தியையும் காட்டி வருகிறார் தனுஷ். நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் தன்னுடைய அடுத்தகட்ட பரிமாணத்தை காட்டதொடங்கியிருக்கிறார். பவர் பாண்டி படத்தின் மூலமாகத்தான் இயக்குனராக அறிமுகமானார் தனுஷ். அந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து ராயன் என்ற அட்டகாசமான கமெர்ஷியல் படத்தை கொடுத்தார்.
ராயன் திரைப்படத்தை பார்த்த பலரும் இன்னொரு வெற்றிமாறன் என தனுஷை பாராட்டினார்கள். அதன் பிறகு நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை எடுக்க அந்தப் படம் சரிவர போகவில்லை. `இப்போது இட்லி கடை படத்தை எடுத்து வருகிறார். அதில் அவர் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இட்லி கடை படத்தின் மீது மிகுந்த அளவு எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
இந்த நிலையில் பிரபல காமெடி நடிகை வித்யூலேகா தனுஷை பற்றி சில விஷயங்களை பேசியிருக்கிறார். அதாவது நான் நடித்த எல்லா படங்களிலும் என்னை பாடி ஷேமிங் செய்தார்கள். ஆனால் ஒரே ஒரு படத்தில்தான் என்னை பாடி ஷேமிங் செய்யவில்லை. அது தனுஷின் பவர் பாண்டி படத்தில்தான் என கூறினார். பாடி ஷேமிங் செய்கிறார்கள் என இயக்குனரிடம் முறையிட்டால் சரிமா நான் வேற நடிகையை பார்த்துக் கொள்கிறேன் என சொல்லிவிடுவார்கள்.
vidhyulekha
அதன் விளைவு எனக்கு வாய்ப்பு போய்விடும். அதனால் எல்லாவற்றையும் நான் தாங்கிக் கொள்கிறேன் என வித்யூலேகா கூறினார்.