நான் எதுக்கு அவரோட போட்டி போடணும்? அது முடியாது.. விஜய்சேதுபதி சொன்ன அந்த பிரபலம்
vijaysethupathi
தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. துணை நடிகராக தன்னுடைய சினிமா கெரியரை ஆரம்பித்த இவர் தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதிலிருந்து தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து தன்னுடைய எதார்த்தமான நடிப்பாலும் தன்னம்பிக்கையான பேச்சாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பு பெற்றார்.
தொடர்ந்து ஹீரோவாகவே நடித்து வந்த விஜய் சேதுபதி பேட்ட திரைப்படத்திற்கு பிறகு வில்லன் அவதாரம் எடுத்தார். ரஜினிக்கு வில்லனாக நடித்து மாஸ் காட்டினார். அதைத் தொடர்ந்து அவர் வில்லனாகவே நடித்து வந்தார். தமிழ் மட்டுமல்ல தெலுங்கு மலையாளம் ஹிந்தி என பிற மொழிகளிலும் வில்லனாக நடித்து இந்திய அளவில் புகழ்பெற்ற நடிகராக மாறினார்.
அதனால் இவரை தொடர்ந்து வில்லனாகவே நடிக்க பல தயாரிப்பு நிறுவனங்கள் முன் வந்தன. விஜய் அஜித் சிவகார்த்திகேயன் தனுஷ் இவர்களுக்கு இணையாக பார்க்கப்பட்ட ஒரு ஹீரோ விஜய் சேதுபதி. இப்படி வில்லனாகவே எத்தனை காலம் நடிக்க என நினைத்து மீண்டும் மகாராஜா திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தார். அந்த படம் பெரிய அளவில் ஹிட்டானது. அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு இப்போது மீண்டும் ஹீரோவாகவே பல படங்களில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் ஏஸ் திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார் விஜய் சேதுபதி. அந்த படத்தில் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் அவருக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடித்திருக்கிறார். இதுவரை இல்லாத வகையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு விஜய் சேதுபதி கூலிங் கிளாஸ் அணிந்து வந்தார். பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்கும் வரை அந்த கூலிங் கிளாஸை அவர் கழட்டவே இல்லை.
இதை கவனித்த ஒரு நிருபர் விஜய் சேதுபதியிடம் முதல் முறையாக கூலிங் கிளாஸ் அணிந்து மேடையில் உட்கார்ந்து இருக்கிறீர்கள். மிஸ்கினுக்கு போட்டியாக இருக்க போகிறீர்களா என்ற ஒரு கேள்வியை கேட்டார். அதற்கு விஜய் சேதுபதி அவருடன் போட்டி போடவே முடியாது. அவர் அலுவலகத்தில் போய் பார்த்தால் படுக்கையில் படுத்து இருக்கிறாரா அல்லது புத்தகத்தில் படித்திருக்கிறாரா என்பதே தெரியாது.
mysskin
அந்த அளவுக்கு அவருடைய அறை முழுவதும் புத்தகங்கள் நிரம்பி வழிகின்றன. ஏகப்பட்ட புத்தகங்களை படித்த ஒரு மாமனிதர். எந்த கேள்வியை கேட்டாலும் அதற்கு அசராமல் பதிலளிக்க கூடியவர். சினிமா மீது மிகப்பெரிய பேஷன் கொண்டவர். அவருடைய பேச்சில் சில பல குறைபாடு இருக்கலாம். ஆனால் எண்ணத்தில் சிறந்த எண்ணமுடையவர் மிஷ்கின் என அவரைப் பற்றி புகழ்ந்து பேசிக்கொண்டே இருந்தார் விஜய் சேதுபதி.