இளையராஜா, ஏஆர்.ரகுமான் இருவருக்கும் என்ன வித்தியாசம்? மணிரத்னத்துக்கு ஃபேவரைட் யாரு?

By :  Sankaran
Update:2025-03-17 14:13 IST

இசைஞானி இளையராஜா குழுவில் கீபோர்டு வாசித்தவர் ஏ.ஆர்.ரகுமான். பிறகு அவரும் ரோஜா படத்தில் இருந்து மிகப்பெரிய இசை அமைப்பாளராகி விட்டார். இளையராஜாவே பெரிய லெஜண்ட். இவர்கள் இருவரையும் குறித்து பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு யாருமே அறியாத சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். என்னன்னு பாருங்க...

இளையராஜாவுக்கும், ஏ.ஆர்.ரகுமானுக்கும் இன்றைக்கும் ரசிகர்கள் கூட்டம் இருக்கு. ஏஆர்.ரகுமான் வளர்ந்தது படிச்சது எல்லாமே பெரு நகரத்துல. அப்படி இருந்தும் கிழக்குச்சீமையிலே, கருத்தம்மா படங்களில் கிராமத்து இசையைப் பின்னி இருப்பார் ஏ.ஆர்.ரகுமான். அவருடைய பாடலைக் கேட்டு பாரதிராஜா கண்ணீர் விட்டு அழுதாராம். அந்த வகையில் திறமை யாருக்கிட்ட எங்கே இருக்கும்னு தெரியாது. பாலிவுட்ல புகழ்பெற்ற பெரிய இயக்குனர் சுபாஷ்கை.


அவரே ரகுமானின் வீட்டுல வந்து காத்துக்கிடந்து பாடல் வாங்கிச் செல்வாராம். ரகுமானைப் பொருத்தவரை அவர் எப்பவுமே இரவில்தான் கம்போசிங் பண்ணுவாராம். அதனால் இரவோடு இரவாக பாலிவுட்ல இருந்து வரும் பெரும் விஐபிகள் ரகுமான் வீட்டில் வந்து காத்துக் கிடப்பார்களாம்.

மௌனராகம் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு இளையராஜாவின் ரீ ரெக்கார்டிங், பிஜிஎம், பாடல்கள்தான் காரணம். முதல் 3 நாள் அந்தப் படத்துக்குக் கூட்டமே இல்லையாம். கடைசில படத்தை இழுஇழுன்னு இழுத்துக்கிட்டு இருப்பதாக அப்போது ரசிகர்கள் குறை சொன்னாங்க. ஆனா யாருமே இளையராஜாவைப் பற்றி குறையாக சொல்லவில்லை. அதன்பிறகு படம் லேட் பிக்கப் ஆனது. பிரபல மலையாள இயக்குனர் பாசில் இளையராஜா மாதிரி ஒரு லெஜண்டைப் பார்க்கவில்லை.

வருஷம் 16, பூவிழி வாசலிலே, என் பொம்முக்குட்டி அம்மாவுக்குன்னு அவரது படங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். எல்லாமே சூப்பர்ஹிட். பாடல்களும் மாஸ். அதே நேரம் மணிரத்னம் இளையராஜாவைப் பற்றி எந்த இடத்திலும் பதிவு செய்யவே இல்லை.

ஆனால் ரகுமானைப் பற்றி அதிகம் பேசி இருக்கிறார். காரணம் என்னன்னா ரகுமான் தன்னடக்கம் ஆனவர். இளையராஜா வித்யா கர்வம் கொண்டவர் என்பதால்தான். ஆனால் இருவருமே திறமைசாலிகள் தான் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. இவ்வாறு அவர்  தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News