மணிரத்னம், சிம்பு கூட்டணி எப்போ பிரேக்கப்? தக்லைஃப் தோல்வியால் கூலிக்கு சிக்கலா?

By :  SANKARAN
Published On 2025-06-11 15:45 IST   |   Updated On 2025-06-11 15:45:00 IST

தக் லைஃப் படத்தின் தோல்வி குறித்தும், மணிரத்னம், சிம்புவின் அடுத்தடுத்த படங்கள் பிரேக்கப் ஆகுமா, இல்லையா என்றும் பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். வாங்க பார்க்கலாம்.

கதை, திரைக்கதையைத் தாண்டி டெக்னிக்கலா நல்லா இருக்குற படம் தக் லைஃப். மணிரத்னம் மாதிரி பெரிய லெஜண்ட் கிட்ட இப்படி ஒரு படத்தை யாரும் எதிர்பார்க்கல. அவரு எப்படி இவ்வளவு ஈசியா ஒரு படத்தை எடுத்தாரு? இந்தப் படத்துக்கு நிறைய கேள்வி இருக்கு. இதெல்லாம் எப்படி கோட்டை விட்டாரு?

படத்துல அங்கங்கே கொஞ்சம் கொஞ்சமா பாடல்களை வச்சாரு? நிறைய பேசிக்கிட்டே இருக்காங்க. அதை ஏன் கொண்டு வந்தாரு? டப்பிங் பேசும்போது யாருக்கு வேணாலும் படம் நல்லாருக்குற மாதிரி தெரியும். முழு படத்தையும் பார்த்தால் தான் அது நல்லாருக்கா இல்லையான்னு தெரியும். கமலே அதுல ஏமாந்துட்டாரு. நல்லாருக்கும்னு நம்பினாரு. அந்த வகையில் எல்லாருடைய நம்பிக்கையையும் மணிரத்னம் ஏமாத்திட்டாரு.

தக் லைஃப் படத்தின் வசூல் அடுத்த பெரிய படமான கூலியைப் பாதிக்குமா என்ற கேள்வி எழுகிறது. பெரிய நம்பிக்கையோடு வருகிற ஓடிடி நிறுவனங்கள் ஏமாந்து விடுகின்றன. அதனால் இப்போதெல்லாம் படத்தை முடிச்சிட்டு எங்களிடம் போட்டுக் காட்டுங்க. நாங்க வாங்கிக்கிறோம்னு சொல்றாங்க. அந்த வகையில் பல படங்கள் ரிலீஸே ஆகல.

ஏன்னா ஓடிடியில் விற்பனை ஆகாம இருக்கு. பெரிய படங்கள் ஏமாற்றும்போது அதே சந்தேகக் கண்ணோட்டத்தில்தான் அதற்குப் பின்னால் வருகிற படத்தையும் பார்ப்பார்கள். அந்த வகையில் மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி நடிக்க மாட்டாரு. பின்வாங்கிருவாருன்னு நினைக்கிறேன். மணிரத்னம் இந்தப் படத்தை எடுக்கும்போது எங்கேயோ கோட்டை விட்டுட்டாரு. அதீத நம்பிக்கைக்கூட ஒரு காரணமா இருக்கலாம்.


ஆனால் அடுத்து அவரே படம் தயாரிக்கவும் கூட செய்யலாம். சின்ன பட்ஜெட், புதுமுகங்கள், ஏ.ஆர்.ரகுமான் பாடல்கள் என உள்ளே கொண்டு வந்தால் படம் நிச்சயமாக வெற்றிபெறும். கதையையே கேட்காம சிம்பு மணிரத்னம் படத்தில் உள்ளே வந்துவிட்டார். அதனால் இனி அவர் கதை கேட்டுத்தான் வருவார்.

அந்த வகையில் மணிரத்னம் ஈகோ இடம் கொடுக்காது. நான் பெய்லியர் கொடுத்துட்டேன்னு தானே கதை கேட்குறே. உன்னை வச்சி நான் படம் பண்ணனுமான்னு அவரு நினைச்சாருன்னா அந்தக் கூட்டணி பிரேக்கப் ஆகிடும் என்கிறார் அந்தனன். 

Tags:    

Similar News