ஆட்ட நாயகி அனுராதாவின் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமான சம்பவமா? பாவம்தான்
Anuradha: கவர்ச்சி நாட்டிய பேரழகி அனுராதாவை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. இப்போது சீரியல்களிலும் நடித்து வருகிறார். 80, 90களில் தன்னுடைய கவர்ச்சிகரமான நடனத்தால் அனைவரையும் ஈர்த்தவர் அனுராதா. தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம் என பிற மொழிகளிலும் ஏராளமான படங்களில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடியிருக்கிறார் அனுராதா. இவருடைய வாழ்க்கையில் இவர் பட்ட கஷ்டங்கள் ஏராளம். அதைப் பற்றி ஒரு பேட்டியில் அனுராதா கூறியிருக்கிறார். சதீஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட அனுராதா ஒரு விபத்தில் […]
Anuradha: கவர்ச்சி நாட்டிய பேரழகி அனுராதாவை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. இப்போது சீரியல்களிலும் நடித்து வருகிறார். 80, 90களில் தன்னுடைய கவர்ச்சிகரமான நடனத்தால் அனைவரையும் ஈர்த்தவர் அனுராதா. தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம் என பிற மொழிகளிலும் ஏராளமான படங்களில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடியிருக்கிறார் அனுராதா.
இவருடைய வாழ்க்கையில் இவர் பட்ட கஷ்டங்கள் ஏராளம். அதைப் பற்றி ஒரு பேட்டியில் அனுராதா கூறியிருக்கிறார். சதீஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட அனுராதா ஒரு விபத்தில் அவருடைய கணவர் கோமா நிலைமைக்கு சென்றுவிட்டாராம். அப்போது அனுராதா மகளுக்கு 7 வயதாம். மகனுக்கு 6 வயதாம்.
இதையும் படிங்க: அடங்கப்பா!. பிக்பாஸை தொகுத்து வழங்க விஜய் சேதுபதிக்கு இத்தனை கோடி சம்பளமா?
மருத்துவர்கள் இவரை காப்பாற்ற முடியாது என்று சொல்லியும் தன் கணவரை வீட்டிற்கு அழைத்து வந்து அவரே பார்த்துக் கொண்டாராம். அந்த நிலைமையில் கணவரின் கால்களில் ஏதோ செயலிழக்க ஒரு நாளைக்கு இரண்டு ஊசிகள் போட வேண்டியிருந்ததாம். மிகவும் விலையுயர்ந்த அந்த ஊசியை போட அந்த நேரத்தில் அவருக்கு போதுமான பணம் கையில் இல்லையாம்.
தன் மகளின் கணவர் இப்படி ஆகிவிட்டாரே என எண்ணிய அனுராதாவின் அம்மாவும் மூன்று மாதங்களில் இறந்து போனாராம். எப்படிடா குடும்பத்தை கொண்டு செல்ல போறோம் என நினைத்த அனுராதா கணவரின் மருத்துவ செலவுக்காக இருந்த சொத்துக்களையெல்லாம் விற்று விட்டாராம்.
இதையும் படிங்க: இந்த நடிகையால்தான் சைந்தவியை ஜிவி பிரிந்தாரா? கசிந்த வீடியோ
சொந்தமாக இருந்த இரண்டு வீடுகளையும் விற்று விட்டாராம் அனுராதா. கிட்டத்தட்ட 11 வருடங்கள் தன் கணவரை காப்பாற்றிய அனுராதா ஒரு நாள் இரவு சாப்பாடு ஊட்டிவிட்டாராம். அப்போது விக்கல் வந்து தலை தொங்கிய நிலையில் இறந்து விட்டாராம் அனுராதாவின் கணவர்.
வேலையே இல்லாமல் இருந்த எனக்கு என் மகள் அவளுடைய 13 வயதில் எனக்காக ஓட ஆரம்பித்தாள். இன்று வரை எங்களுக்காக என் மகள்தான் உழைத்துக் கொண்டிருக்கிறாள்.எப்படி என் அம்மாவுக்காக நான் 13 வயதில் உழைக்க ஆரம்பித்தேனோ அதே போல் என் மகள் அவளுடைய 13வயதில் எனக்காக உழைக்க ஆரம்பித்திருக்கிறாள்.
இதையும் படிங்க: தளபதிக்குரிய ஃபுட் போடலைங்க! எல்லாத்துக்கும் அவர் ஒருத்தர்தான் காரணம்
அவள்தான் இப்போது எல்லாமே எனக்கு என அனுராதா கூறினார். அனுராதாவின் மகளான அபிராமியும் ஒரு சிறந்த நடனக் கலைஞர். நடிகையும் கூட. விஜய் நடித்த ப்ரெண்ட்ஸ் படத்தில் ஒரு முக்கியமாக கேரக்டரில் நடித்திருப்பார்.