சுசித்ராவுக்கு இதெல்லாம் தேவையா? எரிகிற விளக்குல இப்படியா எண்ணையை ஊத்துறது? பிரபலம் விளாசல்

by sankaran v |   ( Updated:2024-05-15 15:40:43  )
Suchithra, DM
X

Suchithra, DM

சென்னை சிட்டியின் பிரபல பண்பலை ரேடியோ மிர்சியில் ஆர்.ஜே.வா இருந்து கலக்கியவர் சுசித்ரா. அதன்பிறகு பாடகியாக, நடிகையாக என அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பெயர் பெற்றவர். பிக்பாஸிலும் வலம் வந்த இவரது நிலைமை இப்படி ஆகிவிட்டதா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. சமீபத்தில் சுசித்ரா கொடுத்த பேட்டி இப்போது சோஷியல் மீடியாவில் பற்றி எரிகிறது. இதுகுறித்து வலைப்பேச்சு அந்தனன் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

சுசித்ரா பேசிய விதம் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் அவங்க சொன்ன விஷயம் எல்லாமே பரிதாபத்துக்குரியது. அவங்க மனசு உடைஞ்சிப் போனது என்னன்னா தாய் தந்தை கிடையாது. கணவருடன் பிரச்சனை. குழந்தை கிடையாது. ஒரே ஒரு சகோதரி. அவங்களும் கைவிட்டுட்டாங்க. நான் எங்கே போவேன்னு தெரியாம, கோயில்ல உட்கார்ந்து மணிக்கணக்கா அழுதேன்னு சொன்னாங்க.

இதையும் படிங்க... சன் பிக்சர்ஸ் போட்ட 2 கண்டிஷன்!… கடுப்பான அஜித்!.. கலாநிதிமாறனுக்கு அல்வாதான்!..

நிஜமாவே அவங்க நிலைமையில இருந்து யோசிச்சிப் பார்த்தா ரொம்ப ரொம்ப பரிதாபகரமான வாழ்க்கை. அது யாருக்குமே வரக்கூடாது. இன்னொன்னு அந்த சூழல் உருவாகும் விதம். ஒருவர் மீது தொடர்ந்து அம்பாக வார்த்தைகளை வீசும்போது அவங்க எவ்வளவு தான் தாங்க முடியும்? அவர் பேசிய பல வார்த்தைகளில் உடன்பாடு இல்லை. அவரது கோபம், ஆத்திரம் தவறான வார்த்தைகளைப் பேச வச்சிருக்கு.

சுசித்ரா மீது அவர் பேசிய விதம் பரிதாபமாகத் தான் இருந்தது. தனுஷூக்கும், மீனாவுக்கும் கல்யாணம் நடக்கும்னு வேற சொல்லிட்டாங்க. அது என்ன மனநிலையில் சொன்னாங்கன்னு தெரியல. அதுல உண்மை இருக்கான்னும் தெரியல. இது சினிமா உலகிற்கு அதிர்ச்சி. தனுஷ் வாழ்க்கையிலும் பிரச்சனை. அவர் டைவர்ஸ் பண்ணிருக்காரு. இந்த நேரத்தில் இங்கு பல கதைகள் ஓடிக்கிட்டு இருக்கு.

தனுஷ் மீது இப்படி இருக்குமோ, அப்படி இருக்குமோன்னு பல யூகங்கள் ஓடிக்கிட்டு இருக்கு. இந்த நிலைமையில தனுஷ் மீது போகிற போக்குல இப்படி ஒரு விஷயத்தை சொல்லிருக்காங்க. அது உண்மையா, பொய்யான்னு தெரிந்து கொள்ள முடியாத நிலைமையில நம்மை நிறுத்திருக்காங்க. இது போகப் போக நிச்சயமா விஸ்வரூபம் எடுக்கும். இவர் சாதாரண பெண்ணாக இருந்தால் யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். சினிமாவில் பிரபலம். எல்லோருடனும் பழகியுள்ளவர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க... டைரக்டர் பிரச்னையே முடிஞ்சிதானு தெரியலை… தயாரிப்பாளரும் பிரச்னையா? தளபதி69ல் என்ன தான் நடக்குது?

சுசீ லீக்ஸ் விவகாரத்தில் நான் மாட்டியதற்கு முக்கிய காரணம் தனுஷூம், என் முன்னாள் கணவர் கார்த்திக் குமார் தான் என்றும் சுசித்ரா தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2016ல் சுசீலீக்ஸ் என்ற பெயரில் நடிகைகளின் அந்தரங்கப் போட்டோக்களை வெளியிட்டார். ஆண்ட்ரியா, திரிஷா, நிக்கி கல்ராணி, அனுயா ஆகியோரும் அந்த லிஸ்டில் உண்டு.

Next Story