கோல்டன் ஏஞ்சலா மாறிட்டாரே லவ் டுடே இவானா!.. போட்டோஸ் சும்மா அள்ளுதே!....

By :  Murugan
Update: 2025-01-18 15:25 GMT

Actress Ivana: கேரளாவை சேர்ந்தவர் இவானா. துவக்கத்தில் சிறுமியாக சில படங்களில் நடித்தார். மாஸ்டர்ஸ் என்கிற மலையாள படத்தில் 2012ம் வருடம் இவர் அறிமுகமானார். தமிழில் பாலா இயக்கிய நாச்சியார் என்கிற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாகவும், பணக்காரனால் ஏமாற்றப்பட்ட ஏழை அப்பாவி பெண்ணாகவும் நடித்து ரசிகர்களிடம் பரிதாபத்தை பெற்றார்.


அதன்பின் சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ படத்தில் ஒரு சின்ன வேடத்தில் நடித்திருந்தார். அதன்பின் 3 வருடங்கள் கழித்து பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு வந்தது. இந்த படத்தில் இவருக்கு நிறைய காட்சிகள் இடம் பெற்றிருந்தது.


இவானாவும் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி சிட்டியில் வசிக்கும் டீன் ஏன் பெண்கள் எப்படி இருப்பார்களோ அதை பிரதிபலித்தார். இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஹிட் அடித்தது. 10 கோடிக்குள் உருவான இந்த படம் 80 கோடி வரை வசூல் செய்த சாதனை படைத்தது.


இந்திய கிரிக்கெட் வீரர் தோனி சினிமா தயாரிக்க ஆசைப்பட்டு ஒரு நிறுவனத்தை துவங்கினார். இந்த நிறுவனம் தயாரித்த முதல் படமான எல்.ஜி.எம் படத்தில் கதாநாயகியாக இவானா நடித்தார். இந்த படத்தில் ஹரிஸ் கல்யாண் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படம் ஒரு தோல்விப்படமாக அமைந்தது.


அடுத்து ஒரு புதுமுக ஹீரோவுடன் மதிமாறன் என்கிற படத்தில் நடித்தார். அதேபோல், ஜிவி பிரகாஷுடன் கள்வன் என்கிற படத்திலும் நடித்தார். இந்த படமும் ஓடவில்லை. இப்போது செல்பிஸ் என்கிற ஒரு தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். ஒருபக்கம், சினிமாவில் வாய்ப்புகளை பெறுவதற்காக தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில், தங்க நிறத்தில் ஜொலிக்கும் ஒரு கட்டிடத்தின் அருகே நின்று போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.



 


Tags:    

Similar News