பிகினியில் உடையில் டூ மச் கிளாமர் காட்டும் டிராகன் பட நடிகை!.. சீ..சீ.. கயடு லோஹர்!...
Kayadu Lohar: கோலிவுட்டிற்கு பல மொழிகளில் இருந்தும் நடிகைகள் வருகிறார்கள். பெரும்பாலும் மும்பை, கேரளாவிலிருந்து அதிகம் வருவார்கள். சிலர் ஆந்திரா மற்றும் கர்நாடகாவிலிருந்து வருவார்கள். ஆந்திரா, கர்நாடகாவை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் தெலுங்கு படங்களில் நடிப்பார்கள். பூஜா ஹெக்டே, ராஷ்மிகா மந்தனா ஆகியோரெல்லாம் கர்நாடகாவை சேர்ந்தவர்கள்தான்.
சிலர் மட்டும் வட இந்தியாவின் வேறு சில மாநிலங்களிலிருந்து வருவார்கள். அப்படி பூனேவிலிருந்து கோலிவுட்டுக்கு வந்திருப்பவர்தான் கயடு லோஹர். பிரதீப் ரங்கநாதன் நடித்து வெளியாகி சூப்பர் ஹிட் அடித்துள்ள டிராகன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
டிராகன் படம் வெளியானது முதலே இவரின் அழகை வர்ணித்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். அசாமில் பிறந்த இவர் கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் துறையில் நுழைந்தார். சில விளம்பர படங்களிலும் நடித்தார். இவர் முதலில் அறிமுகமானது ஒரு கன்னட படத்தில்தான்.
அதன்பின் மலையாளம் தெலுங்கு, மராத்தி ஆகிய மொழி படங்களில் நடித்தார். அதன் பின்னர்தான் அஸ்வத் மாரிமுத்து கண்ணில் பட்டு டிராகன் படத்தில் நடித்திருக்கிறார். அதோடு, அதர்வா நடித்து வரும் இதயம் முரளி படத்திலும் நடித்து வருகிறார். தொடர்ந்து இளம் நடிகர்களுக்கு ஜோடியாக கயடு லோஹர் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கடற்கரையில் பிகினி உடையில் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்த கயடு லோஹரின் புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி காஜி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருக்கிறது.