சைடு ஆங்கிள்ள பார்த்தா வேறலெவல்!.. டைட் பனியனில் அழகை தூக்கலா காட்டுறாரே ரேஷ்மா!..

By :  Murugan
Update:2025-02-17 13:52 IST

reshma

Actress Reshma: ஆந்திராவில் இருந்து கோலிவுட்டில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்கிற ஆசையில் சென்னை வந்தவர்தான் ரேஷ்மா. ஆந்திராவில் இருந்தபோதே டிவி தொகுப்பாளினி, சீரியல் நடிகை என சில வேலைகளை செய்திருக்கிறார். விமான தொகுப்பாளினியாகவும் இருந்திருக்கிறார். அப்போதே திருமணம் செய்துகொண்டு ஃபாரினுக்கு போய் செட்டில் ஆனார்.


குழந்தை பிறந்தநிலையில் கணவருடன் பிரச்சனை ஏற்பட்டு அவரை பிரியும் நிலை ஏற்பட்டது. இதையெல்லாம் ரேஷ்மா பிக்பாஸ் வீட்டில் இருந்த போதே சொல்லியிருக்கிறார். சென்னை வந்து வாய்ப்பு தேடியவருக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எனவே, அதில் நடிக்க துவங்கினார். சினிமாவில் சின்ன சின்ன வேடங்கள் மட்டுமே கிடைத்தது.


வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் சூரியின் மனைவி புஷ்பாவாக வந்து ரசிகர்களை சிரிக்க வைத்தார். இந்த படத்தில் புஷ்பா புருஷனாக சூரி படாதபாடு படுவது போல காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது. அதன்பின் ரேஷ்மாவை திரைப்படங்களில் பார்க்க முடியவில்லை.


ஆனால், பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய வேடத்தில் நடிக்க துவங்கி சீரியல் ரசிகர்களிடம் பிரபலமாகிவிட்டார். இப்போது சீரியல்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். சீரியல்களில் இழுத்தி போர்த்தி நடித்து வரும் ரேஷ்மா டைட்டான பனியன்களில் அழகை தூக்கலாக காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில், ரேஷ்மாவின் புதிய புகைப்படங்கள் இணையத்தை சுற்றி வருகிறது.



 


Tags:    

Similar News