Biggboss Tamil 8: பெண் போட்டியாளருக்காக கலங்கிய அருண்... அர்ச்சனாவ மறந்துடாதீங்க பாஸ்!
Biggbboss Tamil: நேற்று பிக்பாஸ் வீட்டில் நன்றாக ஆடிக்கொண்டிருந்த பெண் போட்டியாளர் வர்ஷினி வெளியேற்றப்பட்டு உள்ளார். இத்தனைக்கும் ஸ்கூல் டாஸ்க் உள்ளிட்ட பல டாஸ்க்குகளை அவர் நன்றாகவே கையாண்டார்.
சாச்சனா அல்லது வேறு யாராவது ஆண் போட்டியாளர் வெளியேறுவர் என்பதுதான் பார்வையாளர்களின் கணிப்பாக இருந்தது. ஆனால் டிஆர்பி எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்று விஜய் சேதுபதி தன்னுடைய மஹாராஜா மகளை காப்பாற்றி விட்டார்.
இதையும் படிங்க: நடிகருடனான காதலை ஒத்துக்கொண்ட ராஷ்மிகா… இவ்வளவு நாள் மறச்சிட்டியே செல்லம்!..
'சுனிதா, வர்ஷினி என ஓரளவு விளையாடும் போட்டியாளர்களை வீட்டைவிட்டு அனுப்பிவிட்டு பின்னர் யாருக்காக இந்த நிகழ்ச்சியை நடத்துகிறீர்கள்?' என ரசிகர்கள் தற்போது சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். மொத்தத்தில் இந்த சீசன் டிஆர்பியை காப்பாற்ற இனி யாராலும் முடியாது என்பதுதான் உண்மை. இதற்கிடையில் வீட்டில் இருந்து வர்ஷினி வெளியேறிய போது அருண் கண் கலங்கினார்.
அவர் மிகவும் வருத்தப்பட்டது வெளிப்படையாக தெரிந்தது. ஸ்கூல் டாஸ்க்கின் போது வர்ஷினியிடம், அருண் சற்று ஓவராக வழிந்தார் என்பதையும் நாம் இந்த இடத்தில் குறிப்பிட்டாக வேண்டும். இதைப்பார்த்த ரசிகர்கள், 'பாஸ் உங்களுக்கு வெளில அர்ச்சனா வெயிட்டிங். வர்ஷினிக்கு பீல் பண்ணி அவங்க இருக்குறத மறந்துட போறீங்க' என கலாய்த்து வருகின்றனர்.
அருணும் இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் இருந்தார். ஆனால் சமயம் பார்த்து அர்ச்சனா வெளியிட்ட வீடியோ அவரை காப்பாற்றி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இன்னும் அப்படி ஒரு படத்த பார்க்க முடியுமா? விஜய் படத்த பற்றி பெருமையாக பேசிய கார்த்தி