விஜய்க்கு நடிக்க ஆர்வமே இல்ல!. எஸ்.ஏ.சி தலையில அடிச்சிக்குவார்!.. நடிகர் சொன்ன பிளாஷ்பேக்!...

By :  MURUGAN
Update: 2025-05-27 06:20 GMT

SAC Vijay

Actor vijay: தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகராக மாறியிருப்பவர் விஜய். இவர் நடிக்கும் படங்கள் 400 கோடி பட்ஜெட்டுக்களில் உருவாகிறது. ஏனெனில் விஜயின் சம்பளமே 200 கோடிக்கும் மேல் என சொல்லப்படுகிறது. அதாவது, சம்பளத்திலும், வசூலிலும் விஜய் ரஜினியை தாண்டிவிட்டார் என்பதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.

ஆனால், இதை ஏற்காத ரஜினி ரசிகர்கள் இன்னமும் விஜயை திட்டியும், விமர்சித்தும் வருகிறார்கள். ஜெயிலர் பட விழாவில் ரஜினி சொன்ன காக்கா - கழுகு கதை கூட விஜயை மனதில் வைத்துதான் என சொல்லப்பட்டது. இதனாலேயே விஜய் ரசிகர்கள் ரஜினியை மிகவும் கடுமையாக விமர்சித்து வருகிறார். மேலும், ரஜினி படம் வெளியாகும் அப்படத்திற்கு எதிரான கருத்துக்களை டிவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.


ஆனால், விஜய் இப்போது அரசியலுக்கு போய்விட்டார். இப்போது நடித்து வரும் ஜனநாயகன் படம்தான் விஜயின் கடைசிப்படம் என கணிக்கப்படுகிறது. சினிமாவில் உச்சம் தொட்ட விஜய் துவக்கத்தில் சினிமாவில் ஆர்வமில்லாமல் இருந்தார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

சினிமாவில் நடிக்க வேண்டும் என விஜய் ஆசைப்பட்ட போது அதை வேண்டாம் என சொல்லி மறுத்தவர் அவரின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர். சினிமா கஷ்டம், உன்னால் முடியாது என என்னென்னவோ அட்வைஸ் செய்தார். ஆனால், விஜய் கேட்கவில்லை. விஜய் உறுதியாக இருந்ததால் தானே பணம் போட்டு சொந்த படம் தயாரித்து விஜயை ஹீரோவாக அறிமுகம் செய்தார்.


சில சொத்துக்களை விற்றும் படமெடுத்தார் எஸ்.ஏ.சி. ஆனால், அப்படி வெளியான படங்கள் ஓடவில்லை. பல தயாரிப்பாளர்களிடம் சென்று என் மகனை வைத்து படமெடுங்கள் என கெஞ்சினார். மேலும், அப்போது முன்னணி நடிகர்களாக இருந்தவர்களிடம் சென்று ‘உங்கள் படத்தில் என் மகனை உங்கள் தம்பியாக நடிக்க வையுங்கள்’ என்றெல்லாம் கேட்டார். ஆனால், யாரும் முன்வரவில்லை.

ஒருவழியாக விஜயகாந்த் அதற்கு சம்மதித்து செந்தூர பாண்டி படத்தில் நடித்துக் கொடுத்தார். இந்த படம்தான் விஜயை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. இந்த படத்தில் வில்லனாக நடித்தவர் பொன்னம்பலம். இவர் சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசியபோது விஜய் பற்றிய முக்கிய தகவல்களை பகிர்ந்துகொண்டார்.

செந்தூரபாண்டி படத்தில் நடித்தபோதெல்லாம் விஜய்க்கு நடிப்பின் மீதே ஆர்வம் போய்விட்டது. அவரின் அப்பா எஸ்.ஏ.சிதான் மகனை எப்படியாவது ஒரு ஹீரோ ஆக்கிவிட வேண்டும் என போராடிக்கொண்டிருந்தார். விஜய் சரியாக நடிக்காத போது ’உன்னை நம்பி நிறைய காசு செலவு பண்ணிட்டேன்டா.. ஒழுங்கா நடிடா’ என தலையில் அடித்துக்கொள்வார். ஆனால், ஒரு கட்டத்தில் விஜய் அதை புரிந்துகொண்டு தன்னை வளர்த்துகொண்டார். அவர் மிகவும் அதிர்ஷ்டசாலி. நல்ல இயக்குனர்கள், நல்ல கதைகள், நல்ல காட்சிகள் அமைந்தது. இப்போது சூப்பர்ஸ்டாருக்கு இணையாக அவர் மாறியிருக்கிறார்’ என பேசியிருந்தார்.

Tags:    

Similar News