Siragadikka Aasai: பெத்த பிள்ளைய தண்ணி தெளிச்சு விட்டுட்டு… மனோஜ் கூட ரொமான்ஸ் ஆசையில் ரோகிணி!
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
ரோகிணிக்கு கடையில் வேலை செய்யும் ராணி ஒரு லேகியத்தை வாங்கி வந்து இதை தினமும் ஒரு ஸ்பூன் பாலில் கலந்து அண்ணனுக்கு கொடுங்க. அப்புறம் அவர் உங்க பேச்சை மட்டுமே கேட்பார் எனச் சொல்லிவிட்டு கொடுத்து செல்கிறார்.
அதை வீட்டுக்கு எடுத்து வரும் ரோகிணி இதை குடித்துவிட்டு மனோஜ் தன்னுடன் ரொமான்ஸ் செய்வது போல கற்பனை செய்து கொண்டு இருக்கிறார். அப்போ மனோஜ், வர பால் எடுத்து கொண்டு வரவா எனக் கேட்டு கிச்சன் செல்ல அங்கு மீனா பால் இல்லை எனக் கூறிவிடுகிறார்.
எடுத்து வச்சி இருக்கலாமே எனக் கேட்க நீங்க குடிக்க மாட்டீங்கள அதான் என்கிறார். ரோகிணி லேகியத்தை வந்து ரூமில் வைத்து நிமிர முத்து கிரிஷுடன் வீட்டுக்கு வருகிறார். ரோகிணி ஒரு வேளை ரகசியம் தெரிந்து விட்டதோ என சந்தேகத்தில் இருக்கிறார்.
பின்னர் முத்து வீட்டில் இருக்கும் எல்லாரையும் அழைக்க இவன் உண்மை தெரிஞ்சா தானே இப்படி கூப்பிடுவான் என பயத்தில் முத்துவின் பின்னாலே செல்ல எல்லாரும் வந்து கிரிஷை பார்த்தவுடன் ஆச்சரியமாக பேசுகின்றனர். இவன் இந்த வீட்டு பையன் எனக் கூற ரோகிணிக்கு அதிர்ச்சியாகி விடுகிறது.
பின்னர் அவங்க பாட்டிக்கு ஆக்ஸிடண்ட் ஆகிவிட்டது. அதான் அவங்களை மருத்துவமனையில் அட்மிட் செய்துவிட்டு இவனை இங்கு அழைத்து வந்தேன் என்கிறார். விஜயா இவன் இங்கு இருக்க வேண்டாம் எனக் கூற முத்து அவன் பாவம் என்னப்பா இப்படி சொல்றாங்க என்கிறார்.
அண்ணாமலை அவன் பர்ஸ்ட் ரேங்க் எடுக்குற நல்ல பையன். அவங்க கிளாஸ் டீச்சரிடமே நான் கேட்டு இருக்கேன் என கிரிஷுக்கு ஆதரவாக அவரும் பேச சரி இவன் இங்க இருக்க யாரு சப்போர்ட் செய்றீங்க எனக் கேட்க மனோஜ், ரோகிணி உட்பட எல்லாரும் கை தூக்குகின்றனர்.
விஜயாவும் விட்டு விடுகிறார். பின்னர் மருத்துவமனைக்கு செல்லும் ரோகிணி அவர் அம்மாவிடம் இப்போ எதுக்கு அவனை அனுப்புன எனக் கேட்க நான் அனுப்பலை. எனக்கு விபத்து நடந்த பிறகு என்ன நடந்துச்சுனே எனக்கு தெரியாது. முத்து என்னை இங்க விட்டுட்டு அவனை கூட்டிட்டு போச்சு என்கிறார்.
நீ சொல்லிடு கிரிஷ் உன் பையனு எனக் கேட்க என் வாழ்க்கையை மொத்தமா முடிச்சி விட பிளான் பண்ணிட்டீயா? இப்போ தான் ஓரளவுக்கு ஒரு நிலைமைக்கு வந்து இருக்கேன். மறுபடி ஆரம்பிக்காதே. முத்து வந்ததும் கிரிஷை அழைச்சிட்டு வந்து உன்னிடம் விடச்சொல் என்கிறார்.