அஜித்துக்காக அப்பவே ஃபீல் பண்ணி அழுத ஷாலினி!.. லவ் கன்பார்ம் ஆன அந்த மொமெண்ட்!..
நடிகர் அஜித்குமார் அமர்க்களம் படத்தில் நடித்த போது ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டது எல்லோருக்கும் தெரியும். சினிமாவில் சில நடிகர்கள் மட்டுமே மனைவியை பிரியாமல் பல வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள். இதில் அஜித் முக்கியமானவர். அஜித்தும், ஷாலினியும் மனம் ஒத்த தம்பதிகளாக இப்போது வரை மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள்.
எனக்கு என்ன வெற்றி கிடைத்தாலும் அது ஷாலினிக்கே சொந்தம். அவர் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தார். அவருக்கென ரசிகர்கள் இருந்தனர். எனக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்தார். நான் இப்போது கார் ரேஸில் வெற்றி பெற்றதன் பின்னணியிலும் அவரே இருக்கிறார். என் வெற்றிக்கான எல்லா கிரெடிட்டும் ஷாலினியையே சேரும் என என அஜித் நெகிழ்ந்து பேசியிருக்கிறார்.
அந்த அளவுக்கு அஜித்துக்கு ஒரு சிறந்த மனைவியாக ஷாலினி இருக்கிறார். அதேபோல், அஜித்தும் சிறந்த கணவராகவும், தந்தையாகவும் இருக்கிறார். அஜித் ஷாலினியை திருமணம் செய்ததற்கு பின்னால் பல கதைகள் இருக்கிறது. அமர்க்களம் படத்தில் நடிக்கும்போது ஷாலினியை காதலிக்க துவங்கிவிட்டார் அஜித். ஷாலினிக்கு அது புரிந்துவிட்டாலும் அதை அவர் வெளியே காட்டிக்கொள்ளவில்லை.
ஷாலினியின் தங்கையிடம் ‘உன் அக்காவை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன். சம்மதிக்க வை’ என்றெல்லாம் தூதுவிட்டு பார்த்தார் அஜித். ஆனால், ஷாலினியிடமிருந்து பாசிட்டிவ்வான பதில் இல்லை. ஆனால், அஜித் காதலிப்பதை நிறுத்தவில்லை. அஜித்தை ஏற்றுக்கொள்வதில் ஷாலினிக்கு நிறைய குழப்பங்கள் இருந்தது. அஜித் வேறு மதத்தை சேர்ந்தவர் என்பதால் தனது ‘வீட்டில் சம்மதிப்பார்களா?’ என்பது முக்கிய கேள்வியாக அவரின் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால், ஒருகட்டத்தில் தன்னை அறியாமலேயே அவர் அஜித்தை காதலிக்க துவங்கியிருந்தார்.
அமர்க்களம் பட இயக்குனர் சரண் அஜித் - ஷாலினி காதல் பற்றி ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘சில காட்சிகளை மூணாறில் எடுக்க திட்டமிட்டோம். ஷாலினி முதலில் அங்கு போய்விட்டார். நானும் அஜித்தும் கொச்சின் சென்று அங்கிருருந்து காரில் மூணாறு சென்றோம். இப்போது போல அப்போது செல்போனெல்லாம் இல்லை. இதனால் கொச்சினிலிருந்து மூணார் செல்லும் வரை மூன்று மணி நேரம் நாங்கள் ஷாலினியிடம் பேசவில்லை’ . நாங்கள் அங்கு சென்று சேர்ந்தபோது ஷாலினி அழுது கொண்டிருந்தார்.
‘ஏன் மூன்று மணி நேரம் என்னை தொடர்பு கொள்ளவில்லை? உங்களுக்கு எதேனும் ஆகியிருக்குமோ என எனக்கு பயம் வந்துவிட்டது என அஜித்திடம் சொல்லி அழுதார். அதோடு, ‘நீங்களாவது எனக்கு போன் பண்ணியிருக்கக் கூடாதா?’ என என்னிடமும் கோபித்துக்கொண்டார்.. அப்போதுதான் அஜித்தும், ஷாலினியும் இவ்வளவு நெருக்கமாகிவிட்டார்கள் என்பது எனக்கே தெரியவந்தது’ என சொல்லியிருக்கிறார்.