பாரதிராஜா என்னை ஏமாத்திட்டாரு... இதெல்லாம் நடக்கும்னு நினைச்சிக்கூட பார்க்கல... மனம் குமுறிய நடிகை
பிரபல நடிகை சரிதாவின் தங்கை நடிகை விஜி சந்திரசேகர் . இவர் ரஜினியின் தில்லு முல்லு படத்தில்தான் அறிமுகம் ஆனார். அவர் நடித்த கடைசி படம் பார்த்தாலே பரவசம். இதுல கமல் கௌரவ வேடத்தில் நடித்து இருப்பார். அந்த வகையில் முதல் படத்தில் அதாவது தில்லு முல்லுவில் பர்ஸ்ட் ஷாட் ரஜினியுடனும், கடைசி ஷாட் கமலுடனும் நடித்தது பெரிய பாக்கியம் என்கிறார். இவர் பாரதிராஜா தன்னை ஏமாற்றிவிட்டதாக வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார். என்னன்னு பாருங்க.
பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான கிழக்கு சீமையிலே படத்தில் வடிவேலு ஒச்சுவாகவும், விஜி கௌதாரியாகவும் வந்து கலக்குவார்கள். பரிசல் ஓட்டும் பெண்ணாக வரும் விஜியை வடிவேலு காதலிப்பது போன்ற அந்தக் காமெடி காட்சியை இப்போது பார்த்தாலும் நமக்கு சிரிப்புப் பொத்துக் கொண்டு வரும். இந்தப் படம் கிழக்குச்சீமையிலே.
பாரதிராஜாவின் இயக்கம் என்றதும் நடிகை விஜி ஒத்துக் கொண்டார். அதுவும் பாரதிராஜா அவரிடம் இது முதல் மரியாதை ராதா கெட்டப்னு சொன்னதும் வேறு ஏதோ பெரிசாக் காட்டப்போறாங்கன்னு ஆவல்ல படத்துல நடிக்க ஒத்துக்கிட்டாராம் விஜி. அதன்பிறகு படத்தில் காமெடி என்றதும் அப்செட் ஆகியுள்ளார்.
'எனக்குக் காமெடியே வராது. நான் எப்படி இதுல நடிக்கிறதுன்னு நினைச்சேன். ஒரு கட்டத்துல வேணாம்னு சொல்லிட்டு ஓடிப்போயிடலாமான்னு கூட நினைச்சேன். அப்புறம் பாரதிராஜா படம். இதுல ஒரு பிரேம்ல வர்றதே பெரிய விஷயம். அப்படிங்கறதாலதான் ஒத்துக்கிட்டேன். ஆனாலும் பாரதிராஜா என்னை ஏமாத்திட்டாருன்னுதான் நான் எங்கே கேட்டாலும் சொல்லுவேன். இதுபற்றி நான் அவரிடமே நேரிடையாக் கேட்டுருக்கேன். ஏன் எனக்கு இந்தக் காமெடி ரோலைக் கொடுத்தீங்க'ன்னு. 'முதல் மரியாதை கெட்டப்'னு அவரு சொன்னாரு.
அதாவது அந்த பரிசல். நான் வேற மாதிரி எடுத்துக்கிட்டேன். நான் கேட்டதும் அவரும் 'ஆமாம்மா...'ன்னு சிரிச்சிக்கிட்டே சொல்வாரு என்கிறார் நடிகை விஜி. அதே நேரம் இந்தப் படத்துக்கு அப்புறம் அவருக்கு 100 படங்கள் வரை காமெடியாக நடிக்க அழைப்பு வந்ததாம். ஆனால் ஒத்துக்கவே இல்லையாம். நடிகர் வடிவேலுவுடன் நடிப்பதற்குக் கூட ரெண்டு மூணு படங்கள் வந்ததாம். ஆனால் அவர் தனக்குக் காமெடி செட்டாகாதுன்னு வடிவேலுவிடம் சொல்லிவிட்டாராம்.