வெண்ணிறாடை மூர்த்தி சொன்னதன் விளைவு.. காமெடி நடிகை ஷோபனா தற்கொலையின் பின்னணி

By :  Rohini
Update: 2025-02-04 08:46 GMT

லொள்ளு சபா காட்டிய வழி: காமெடியில் பெண் நடிகைகளுக்கான இடம் என்றைக்குமே காலியாகத்தான் இருக்கின்றன. மனோரமா, மனோரமாவுக்கு அடுத்த படியாக கோவை சரளா அவ்வளவுதான். கோவை சரளாவுக்கு பிறகு யார் அந்த இடத்தை பிடிப்பார் என்று அனைவருமே எதிர்பார்த்திருந்தனர். அதற்கு ஒரு தகுதியான ஆளாகத்தான் இருந்தார் காமெடி நடிகை ஷோபனா. விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியில் கலக்கி வந்தவர்தான் ஷோபனா.

சந்தானம்: எத்தனையோ நடிகர்கள் லொள்ளு சபா நிகழ்ச்சியில் பிரபலமாகி அதன் பிறகு தான் வெள்ளித்திரைக்குள் வந்திருக்கிறார்கள். குறிப்பாக இன்று காமெடியில் கிங்காக இப்போது ஹீரோவாக மாஸ் காட்டி வரும் சந்தானம் கூட லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம்தான் பிரபலமானார்கள். இப்படி பல நடிகர்கள் வெள்ளித்திரைக்குள் வந்திருக்கிறார்கள். அப்படி வந்தவர்தான் ஷோபனா.

புகழ்பெற்ற காமெடி: இவர் நடித்து புகழ்பெற்ற காமெடியான சும்மா பேசிக்கிட்டு இருக்கேன்பா காட்சி. சில்லுனு ஒரு காதல் படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக இந்தப் படத்தில் நடித்திருப்பார். அதே காட்சியில் என் புள்ளைகளுக்கு அப்பன் எனக்கு புருஷன் என்று சொல்லும் டோன் அனைவரையும் ரசிக்கும் படியாகத்தான் இருந்தது. கோவை சரளாவுக்கு பிறகு இவர்தான் காமெடியில் ராணியாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென தற்கொலை செய்து கொண்டார்.

இதை பற்றி ஷோபனாவின் சகோதரி ஒரு பேட்டியில் கூறும் போது என் அம்மாவுக்கும் ஷோபனாவுக்கும் அடிக்கடி சண்டை வந்து கொண்டேதான் இருக்கும். என் அம்மா கேன்சரால் பாதிக்கப்பட்டிருந்தார். அதை ஷோபனாதான் கவனித்து வந்தார். அப்போது நடிகர் வெண்ணிறாடை மூர்த்தி ஷோபனாவிடம் முருகனுக்கு விரதம் இருந்து வந்தால் யாருக்காவது உடம்பு சரியில்லை என்றால் சரியாகிவிடும் என்று ஒரு முறை கூறியிருக்கிறார். அதோடு கெரியர் சைடும் எந்த பாதிப்பும் வராது என்றும் கூறியிருக்கிறார்.

தன் அம்மாவிற்காக முருகனுக்கு விரதம் இருந்து வந்தாராம். அதோடு வரிசையாக படங்களில் நடிக்கவும் வாய்ப்பு வந்தவண்ணம் இருந்திருக்கின்றது. வெண்ணிறாடை மூர்த்தி சொன்னது சரிதான் என அன்றிலிருந்து விரதத்தை விடாமல் கடைபிடித்து வந்திருக்கிறார். இதனால் ஷோபனாவின் உடல் நலமும் பாதிக்கப்பட்டு விட்டது. ஏன் உன் உடம்ப பார்க்க மாட்டீயா என்று அவரை அம்மா சத்தம் போட அந்த விரக்தியில்தான் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என அவருடைய சகோதரி கூறினார்.

Tags:    

Similar News