அஜித்துக்காக கூடிய கூட்டம் இல்ல.. அந்த நடிகைக்காக வந்த கூட்டம்! என்ன படம் தெரியுமா?
உண்மையிலேயே விடாமுயற்சி: அஜித் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் வரும் 6ம் தேதி உலகெங்கிலும் ரிலீசாக இருக்கின்றது. இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க படத்தை பற்றிய சில சுவாரசியமான தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டு வருகின்றன. இன்று படப்பிடிப்பு தளத்தில் அஜித்தின் உழைப்பு எப்படி இருந்தது என்பதை விளக்கும் விதமாக மேக்கிங் வீடியோ ஒன்றை பட குழு வெளியிட்டு இருக்கிறது. தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி மாஸ் ஹீரோவாக இருப்பவர் அஜித். எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் சினிமாவிற்குள் வந்து படிப்படியாக முன்னேறி தனது கடின உழைப்பாலும் விடாமுயற்சியாலும் இன்று இந்த அளவு ஒரு பெரிய இடத்தை அடைந்திருக்கிறார்.
முக்கியமான படம்: ஆரம்பத்தில் மெக்கானிக்காக இருந்த அஜித் எப்படியாவது சினிமாவில் நுழைந்து ஒரு பெரிய நடிகராக வரவேண்டும் என்ற எண்ணத்தில் தான் வந்தார் .அவர் நினைத்ததைப் போல இன்று தமிழ்நாடே கொண்டாடப்படும் ஒரு நடிகராக உயர்ந்திருக்கிறார். ஆரம்பத்தில் இவரை தூக்கி நிறுத்திய படங்களாக காதல் கோட்டை, அமராவதி, ஆசை போன்ற திரைப்படங்களை சொல்லலாம். இதில் காதல் கோட்டை திரைப்படம் அஜித்திற்கு மிக மிக ஸ்பெஷலான திரைப்படம்.
தேசிய விருது: அதுவரை இந்த மாதிரி ஒரு காதலை யாருமே பார்த்ததில்லை .படம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை ஒருவரை ஒருவர் பார்க்காமல் உருக உருக காதலித்து கடைசியில் ஒன்று சேர்வது மாதிரியான கதைக்களம் தான் காதல் கோட்டை. படத்தில் அஜித் மற்றும் தேவயானி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்கள். அந்த படத்திற்காக இயக்குனர் அகத்தியனுக்கு தேசிய விருதும் வழங்கப்பட்டது. இதன் மூலம் முதன் முதலில் ஒரு இயக்குனருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது என்றால் அது இந்த படத்தில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி ஒரு தலைப்பா?: இந்த நிலையில் காதல் கோட்டை என்ற தலைப்பு முதலில் தேர்வாகவில்லை. நான் வைத்த தலைப்பு நீங்காத நினைவுகள் மற்றும் நிலா நிலா ஓடி வா என்ற தலைப்பு தான் என அகத்தியன் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அதன் பிறகு படப்பிடிப்பிற்காக ஊட்டிக்கு சென்றபோது ஒரு பத்திரிக்கையில் பார்த்தேன், அதில் படத்தின் தயாரிப்பாளர் படத்தின் போஸ்டருடன் காதல் கோட்டை என்ற தலைப்பையும் பதிவிட்டு வெளியிட்டு இருந்தார்.
அதன் பிறகு தான் இந்த படத்திற்கு காதல் கோட்டை என வைக்கப்பட்டது என அந்த பேட்டியில் கூறினார். அது மட்டுமல்ல படத்தின் தயாரிப்பாளர் என்னிடம் முதல் ஷோவுக்கு மக்களை எப்படி வரவழைக்க வேண்டும் என்பதை நான் பார்த்துக் கொள்கிறேன். இரண்டாவது ஷோவில் நீதான் மக்களை வரவைக்க வேண்டும் ,என்ன பண்ணனுமோ பண்ணிக்கொள் என சொன்னாராம்.
அவர் சொன்னதைப் போல முதல் ஷோ, படத்தை பார்க்க மக்கள் கூட்டம் அலைமோதியது .அதற்கு காரணம் போஸ்டரில் ஹீராவின் படத்தை தயாரிப்பாளர் வைத்ததுதான் .ஒரு காட்சியில் ஹீரா கீழே படுத்த மாதிரி போஸ் கொடுத்திருப்பார் .அந்த புகைப்படத்தை முழுவதுமாக ஒட்டி ரசிகர்களை ஈர்த்து இருக்கிறார் படத்தின் தயாரிப்பாளர். இதன் காரணமாகத்தான் முதல் ஷோவுக்கு கூட்டம் கூட்டமாக மக்கள் வந்தார்கள் என அகத்தியன் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.