கமலுக்காக கார்த்திக்கை டீலில் விட்ட மணிரத்னம்!.. அந்த படத்தில் இவ்வளவு நடந்துச்சா!...

By :  Murugan
Update: 2025-02-04 08:34 GMT

Manirathnam: சில படங்களை இயக்கியிருந்தாலும் மௌன ராகம் திரைப்படம் மூலம் கவனிக்கப்பட்டவர் மணிரத்னம். நாடக பாணியில் அதிக வசனங்களை கொண்டு திரைப்படங்கள் உருவாகி வந்த காலத்தில் குறைந்த வசனங்கள், காட்சி வழியாக அழகியல் என அடித்தளம் போட்டவர்தான் மணிரத்னம்.

சினிமா என்பது விஸ்வல் மீடியம் என்பதை புரிந்து அதை திரையில் சரியாக காட்டியவர் மணிரத்னம் மட்டுமே. இவரின் படங்களில் நான்கு வசனங்கள் என்றாலும் நறுக்கென இருக்கும். இவரின் இயக்கத்தில் நடிக்கும் நடிகர்களுக்கு அதுவே அவர்களின் கெரியர் பெஸ்ட் படமாக அமையும்.


நடிகர்களின் பெஸ்ட்: மோகன், கார்த்திக் இருவருக்கும் மௌன ராகம், கமலுக்கு நாயகன், அரவிந்த்சாமிக்கு ரோஜா, ரஜினிக்கு தளபதி, மாதவனுக்கு அலைபாயுதே என சொல்லிக்கொண்டே போகலாம். இவர் இயக்கிய ரோஜா, பம்பாய் ஆகிய படங்கள் தேசிய அளவில் பேசப்பட்டது. கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படம் உலக அரங்கில் பாராட்டுக்களை பெற்றது.

பொன்னியின் செல்வன்: இவரின் இயக்கத்தில் நடிக்க எல்லா நடிகர்களுமே ஆசைப்படுவார்கள். எம்.ஜி.ஆர், கமல் என பலரும் முயன்று எடுக்க முடியாமல் போன பொன்னியின் செல்வன் நாவலை சினிமாவாக எடுத்து வெற்றி பெற்று காட்டினார் மணிரத்னம். இப்போது கமல் - சிம்புவை வைத்து தக் லைப் படத்தை எடுத்து முடித்திருக்கிறார்.


அக்னி நட்சத்திரம்: பிரபு - கார்த்திக்கை வைத்து மணிரத்னம் இயக்கிய படம்தான் அக்னி நட்சத்திரம். இந்த படம் 1988ம் வருடம் வெளியானது. அப்போது போட்டி நடிகர்களாக இருந்த பிரபு - கார்த்திக்கை வைத்து படமெடுத்தார் மணிரத்னம். இந்த படம் பாதி வளர்ந்த நிலையில் கமலை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு மணிரத்னத்துக்கு வந்தது.

நாயகன்: அப்படி உருவான படம்தான் நாயகன். அக்னி நட்சத்திரம் படமும், நாயகன் படமும் ஒரே நேரத்தில் வளர்ந்தது. ஒருகட்டத்தில் அது முடியாமல் போக அக்னி நட்சத்திரம் படத்தை நிறுத்திவிட்டு நாயகன் படத்தை மட்டுமே எடுத்தார் மணிரத்னம். நாயகன் படப்பிடிப்பு முடிந்த பின்னரே அக்னி நட்சத்திரம் படத்தை முடித்திருக்கிறார். இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது.

Tags:    

Similar News