மௌன ராகம் படத்தில் நான் செய்த தப்பு!.. மனம் திறந்து பேசிய மணிரத்னம்!...

By :  Murugan
Update: 2024-12-15 09:30 GMT

manirathnam

Manirathnam: தமிழ் சினிமாவில் மட்டுமில்லை. இந்திய சினிமாவில் முக்கிய இயக்குனராக இருப்பவர் மணிரத்னம். நாடகத்தனமான சினிமாக்கள் வந்து கொண்டிருந்த நேரத்தில் காட்சி மூலம் அழகியலை காட்டியவர் இவர். வசனங்களை மட்டுமே நம்பிக்கொண்டிருந்த சினிமாவில் காட்சிகள் மூலம் கதாபாத்திரங்களின் உணர்வுகளை கடத்த முடியும் என நிரூபித்து காட்டியவர் இவர்.

இவர் இயக்கிய ரோஜா, பம்பாய், நாயகன், தளபதி போன்ற திரைப்படங்கள் சினிமாவை கற்று கொள்ள விரும்புபவர்களுக்கும், இளைய இயக்குனர்களுக்கும் இப்போதும் ஒரு பாடமாக இருக்கிறது. இவர் எடுத்த இதயத்தை திருடாதே, அலைபாயுதே படங்களை பார்த்துவிட்டு சினிமாவுக்கு வந்த பல இயக்குனர்கள் இருக்கிறார்கள்.


இப்போதுள்ள கவுதம் மேனன், ஷங்கர், அட்லீ உள்ளிட்ட பல இயக்குனர்கள் மணிரத்தினத்தின் ரசிகர்கள்தான். மணிரத்னம் போல் காதல் கதைகளை இயக்கியவர் தமிழ் சினிமாவில் யாருமில்லை என்றே சொல்ல வேண்டும். கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை பலர் முயன்றும் திரைப்படமாக எடுக்க முடியவில்லை.

ஆனால், மணிரத்னம் அதை சாதித்து காட்டினார். அவர் இயக்கிய நாயகன் திரைப்படம் கமலின் வாழ்க்கையிலும், இந்திய சினிமாவிலும் ஒரு முக்கிய படமாக இருக்கிறது. 80களில் மணிரத்னம் சில படங்கள இயக்கியிருந்தாலும் மோகன், ரேவதி, கார்த்திக் நடிப்பில் வெளிவந்த மௌனராகம் படம் அவர் எப்படிப்பட்ட இயக்குனர் என காட்டியது.


இந்த படத்தின் ஒளிப்பதிவை பார்த்துவிட்டு சினிமாவுக்கு வந்த பலர் இருக்கிறார்கள். இந்த படத்தை உல்டா செய்துதான் அட்லி ராஜா ராணி படத்தை இயக்கினார். இந்நிலையில், மௌன ராகம் படத்தில் நான் ஒரு தவறு செய்துவிட்டேன் என மணிரத்னம் சொல்லி இருக்கிறார்.

மௌன ராகம் படம் ரிலீஸான போது சிட்டியை விட்டு வெளியே உள்ள ஒரு தியேட்டருக்கு அந்த படத்தை பார்க்க போனேன். தியேட்டர் உள்ளே போனதும் முதல் 10 வரிசை காலியாக இருந்தது. சரி நமக்கு அவ்வளவுதான் என நினைத்துக்கொண்டேன். படம் முடிந்து வெளியே வரும்போது ஒருவர் வேஷ்டியை மடித்து கட்டிக்கொண்டு ‘என்னடா இது அந்த பொண்ணுக்கு நாலு அடி போட்டிருந்தா எல்லாம் சரியா இருந்திருக்கும்’ என பேசிக்கொண்டே போனாரு.

அவர் சொல்வதை சரி என சொல்லவில்லை. ஆனால், அந்த பாயிண்ட்டை படத்தில் உயர்த்தி காட்டி ஒரு பெண்ணை அடிப்பது என்பது தீர்வு ஆகாது என நான் காட்டியிருக்க வேண்டும். நிறைய திருமண வாழ்க்கையில் அதுபோல ஒரு அணுகுமுறை இருக்கும்’ என அவர் பேசியிருக்கிறார்.

Tags:    

Similar News