பானுப்பிரியாவும் லைலாவும் குடுத்த குடைச்சல்!.. படாத பாடுபட்ட இயக்குனர் விக்ரமன்!...
விக்ரமன் சினிமாட்டிக்: சினிமாவை பொறுத்த வரைக்கும் ஒவ்வொரு ஜானருக்கும் ஒவ்வொரு இயக்குனர்கள் திறமை வாய்ந்தவர்களாக இருப்பார்கள். நகைச்சுவை படங்கள் என்றால் சுந்தர் சி, கமர்சியல் மற்றும் சென்டிமென்ட் படங்கள் என்றால் கே எஸ் ரவிக்குமார், ஆக்சன் படங்கள் என்றால் சமீபத்தில் பல இயக்குனர்கள் என இவ்வாறு தரம் பிரித்து குறிப்பிடலாம். அதைப்போல 90கள் காலகட்டத்தில் குடும்பங்கள் அனைவரும் கொண்டாட கூடிய படங்களை பெரும்பாலும் எடுத்து மிகப்பெரிய வெற்றி கொடுத்தவர்களில் முக்கியமாக கருதப்படுபவர் இயக்குனர் விக்ரமன்.
விக்ரமன் எத்தனையோ படங்களை எடுத்தாலும் அவர் பெயரை சொன்னாலே நம் நினைவுக்கு வருவது பூவே உனக்காக திரைப்படம் தான். அந்த படம் இப்போது பார்த்தாலும் போர் அடிக்காத வகையில் ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் இருக்கும். ரிலீஸ் ஆன நேரத்தில் பெரிய பிளாக்பஸ்டர் வெற்றி படமாக அமைந்தது பூவே உனக்காக. இதைப் போல உன்னை நினைத்து திரைப்படமும் சூர்யாவுக்கு ஒரு டர்னிங் பாயிண்டாக அமைந்தது. கார்த்திக் ,பிரபு என அப்போதைய காலத்தில் சூப்பர் ஹீரோக்களாக இருந்தவர்களை வைத்து இயக்கி பல நல்ல நல்ல செண்டிமெண்ட் படங்களை கொடுத்திருக்கிறார் விக்ரமன்.
பானுப்ரியாவுடன் இப்படி ஒரு பிரச்சினையா? இந்த நிலையில் ஒரு படத்தை எடுக்கும்போது சுமூகமாக எடுத்து விட முடியாது. நடிகர்களுடனும் நடிகைகளுடனும் இல்லை தயாரிப்பாளருடனும் ஏதாவது ஒரு வகையில் பிரச்சனை இருக்கத்தான் செய்யும். அந்த வகையில் ஏதாவது நடிகைகளுடன் உங்களுக்கு பிரச்சனை நடந்திருக்கிறதா என்ற ஒரு கேள்வி அவர் முன்வைக்கப்பட்டது. அதற்கு புதுவசந்தம் திரைப்படத்தில் பானுப்பிரியாவுடன் சில கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக விக்ரமன் கூறினார். அந்தப் படத்தில் ஒரு காட்சியில் பானுப்பிரியா போனி டைல் ஹேர் ஸ்டைல் பண்ணி இருந்தாராம்.
அதை பார்த்ததும் விக்ரமன் இந்த காட்சிக்கு இப்படி ஹேர் ஸ்டைல் வேண்டாம். வேறு மாதிரி பண்ணிக்கோங்க எனக் கூற அதற்கு பானுப்பிரியா ஏன் இப்படி இருந்தால் என்ன நன்றாக தானே இருக்கிறது எனக் கூறியிருக்கிறார். அதற்கு விக்ரமன் இந்த ஹேர் ஸ்டைலில் உங்களை பார்ப்பதற்கு வயதானவரை போல தெரிகிறது என கூறியிருக்கிறார். இது பானுப்பிரியாவுக்கு ஒரு வித மன அழுத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது .அதன் பிறகு அந்தப் படத்தில் சரியான ஒத்துழைப்பை பானுப்பிரியா கொடுக்கவில்லையாம்.
சமாதானம் ஆன பானுப்ரியா:ஒரு நாள் பானுப்பிரியாவிடம் விக்ரமன் கேட்க அதற்கான காரணத்தை சொல்லி இருக்கிறார். அதாவது தன்னை வயதானவர் என கூறி விட்டீர்கள் என காரணத்தை சொல்லியிருக்கிறார். ஆனால் இது என் வாயிலிருந்து தவறாக வந்தது தான். வேண்டுமென்றே நான் சொல்லவில்லை. இருந்தாலும் படம் ரிலீஸ் ஆகி நல்ல ஒரு வரவேற்பை பெற்ற நிலையில் பானுப்பிரியா என்னுடைய உதவியாளர்களிடம் எனக்கு வாழ்த்து சொல்லுமாறு சொல்லி அனுப்பினார்.
நான் அப்போது ஊரில் இல்லை. அதைப்போல உன்னை நினைத்து படத்திலும் லைலா ஆரம்பத்தில் இருந்து நல்ல ஒரு ஒத்துழைப்பை தான் கொடுத்து வந்தார். ஒரு பாடல் காட்சியில் அவருடைய டிரஸ் மேட்சிங் சரியில்லை என பிரச்சனை செய்தார். அந்த நேரத்தில் மேக்கப் ஆர்டிஸ்ட் கூட இல்லையாம். இருந்தாலும் என்னுடைய டிரஸ் மேட்சிங் சரியில்லை என அடம்பிடித்தாராம் லைலா. அதன் பிறகு விக்ரமன் ஏதோ சமாதானப்படுத்தி அந்த காட்சியில் நடிக்க வைத்ததாக கூறினார்.
அதுமட்டுமல்ல அந்த படத்தில் நடிக்கும் பொழுது ஆரம்பத்தில் இருந்து லைலாவுக்கு சரியாக நடக்க முடியாத சூழ்நிலை .இருந்தாலும் பரவாயில்லை .நிற்க வைத்தாவது உங்களுடைய ஷாட்டை நான் எடுத்து விடுகிறேன் என மிகவும் பெருந்தன்மையுடன் நான் நடந்து கொண்டேன். ஆனால் லைலா அந்த நேரத்தில் அப்படி நடந்தது எனக்கு கவலையை அளித்தது என விக்ரமன் கூறினார்.