ஆசையில் கட்டிபிடித்த இயக்குனர்..கடவுளுக்கு சமம் என சொல்லி தள்ளிவிட்ட இளையராஜா
80,90களில் தமிழ் திரையுலகில் மிகவும் கோலோச்சிய இசையமைப்பாளராக இருந்தவர் இளையராஜா. தற்போதுள்ள 2 கே கிட்ஸ்களுக்கும் பிடித்தமான இசையமைப்பாளராகவும் இருந்து வருகிறார். சமீபத்தில்தான் லண்டனில் சிம்பொனி இசையை நிகழ்ச்சி பெரும் சாதனை படைத்து வந்தார். அவருக்கு திரையுலகினர் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் அவருக்கு கூடிய சீக்கிரம் விழா எடுக்கவும் முடிவு செய்துள்ளனர்.
எம்.எஸ்.வி , சங்கர் கணேஷ், என அந்த காலத்தில் பெரிய இசையமைப்பாளர்களாக இருந்தவர்கள் மிகவும் பெருந்தன்மையுடனும் சகோதரத்துவத்துடனும் அன்பாகவும் இருந்து வந்தனர். ஆனால் எப்போது இளையராஜாவுக்கு பேரும் புகழும் வந்ததோ அப்போதே தலைக்கணமும் சேர்ந்து வந்துவிட்டது. தான் தான் பெரியவன், எனக்குத்தான் எல்லாம் தெரியும் என்பது போல கர்வத்துடன் இருக்கிறார் என்று அவர் மீது பல சர்ச்சைகள் எழுந்தன.
ஆனால் இதை இளையராஜா மறுக்கவும் இல்லை. எனக்கு திமிரு இருப்பதில் என்ன தவறு? நான் சாதனைகளை படைத்தவன், அப்போ கூடவே தலைக்கணமும் இருக்கத்தான் செய்யும் என்று வெளிப்படையாகவே கூறியிருந்தார் இளையராஜா. இந்த நிலையில் ஆஸ்கார் மூவிஸ் செந்தில் பாலாஜி இளையராஜாவை பற்றி ஒரு விஷயத்தை கூறியிருக்கிறார். அவரை எப்போது சாமி , கடவுள் என்று கூப்பிடத்தான் ஆசைப்படுவாராம் இளையராஜா.
அனைவரிடமும் சரி சமமாக உட்கார்ந்து சாப்பிட விரும்ப மாட்டார். சகஜமாக பேச மாட்டார். ஓவர் ஆட்டிட்யூட் காட்டுவார் என்றெல்லாம் செந்தில் பாலாஜி கூறினார். மேலும் ஒரு பெரிய இயக்குனரிடமும் இவர் திமிரு காட்டியதை பற்றி கூறியிருக்கிறார். அதாவது இப்போது இருக்கும் ஒரு பிரம்மாண்ட இயக்குனர் பெயரில் இருந்த ஒரு பழம்பெரும் இயக்குனர் சாமி படங்களை எடுத்தவர்.
அவர் ஒரு சமயம் ஸ்டூடியோவில் இளையராஜாவை பார்த்த போது ஆசையில் ஓடிப் போய் கட்டி பிடித்தாராம். உடனே இளையராஜா அவரை தள்ளிவிட்டு என்னை தொட்டு எல்லாம் பேசக் கூடாது. கடவுளுக்குச் சமமானவன் என்று சொன்னாராம். இது நடந்தது உண்மை என செந்தில் பாலாஜி கூறினார்.