ஸ்டேட் அவார்டு வாங்கிய அந்தப் படம் தேவயானி தயாரித்ததா? இது தெரியாதே

By :  Rohini
Update: 2024-12-23 07:36 GMT
devayani

தேவயாணி:

தமிழ் சினிமாவில் 90கள் காலத்தில் ஒரு முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை தேவயானி. ஹீரோயினாக நடிப்பதற்கு முன் சிவசக்தி என்ற சத்யராஜ் நடித்த படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருப்பார் தேவயானி.

 அதன் பிறகு துணை நடிகையாகவும் நடித்து வந்தார். ஆனால் இது நமக்கு சரிவராது என நினைத்து ஹீரோயின் வாய்ப்புக்காக காத்திருந்தார் தேவயானி. அவர் காத்திருந்ததற்கு நல்ல ஒரு பலனும் கிடைத்தது. அஜித், விஜய், பார்த்திபன், சரத்குமார் என பெரிய பெரிய நடிகர்களுடன் டூயட் பாடும் அளவுக்கு வளர்ந்தார்.

 ஒரு உச்ச நடிகையாகவே திகழ்ந்து வந்தார் தேவயானி. அவர் பீக்கில் இருக்கும்போதே இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவருடைய திருமணம் நடந்த அந்த நேரம் தமிழ் சினிமாவே ஒரே பரபரப்பில் இருந்தது. ஏனெனில் இவர்களுடைய காதலுக்கு தேவயானியின் பெற்றோர் சம்மதம் தெரிவிக்கவில்லை.


 எவ்வளவோ சொல்லியும் மறுத்து வந்திருக்கின்றனர். அதுவரை தன் அம்மாவின் பேச்சை மீறாதவராக இருந்த தேவயானி அன்று ஒரு முடிவு எடுத்தார். அதிகாலை தன் வீட்டின் கேட்டை எகிரி குதித்து ரகசியமாக தனது காதல் கணவரான ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டார்.

பரபரப்பை ஏற்படுத்திய திருமணம்:

 இந்த ஒரு செய்தி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் பரபரப்பில் ஆழ்த்தியது. போலீஸ் வரை இவர்களுடைய திருமண செய்தி பரவியது. அந்த நேரத்தில் யாருமே தங்களுக்கு உதவியாக இல்லை. ஆனால் இயக்குனர் விக்ரமன் மட்டும்தான் எங்களுக்கு சப்போர்ட்டாக இருந்தார்.

அதனால் திருமணம் முடிந்த கையோடு நேராக அவர் வீட்டுக்கு சென்று விட்டோம். அவர் என்னுடைய அப்பா அம்மாவிடம் எவ்வளவோ பேசி சம்மதத்தை வாங்க நினைத்தார். ஆனால் என் பெற்றோர் சம்மதிக்கவில்லை. அதனால் சில காலம் விக்ரமன் வீட்டில் தான் நாங்கள் தங்கினோம். விக்ரமனும் அவருடைய மனைவியும் எங்களை நல்ல முறையில் பார்த்துக் கொண்டனர் என தேவயானி கூறி இருக்கிறார்.

 திருமணத்திற்கு பிறகு தேவயானி தயாரித்த படம் காதலுடன். அந்த படத்தை ராஜகுமாரன் தான் இயக்கினார். அதில் முரளி ஹீரோவாக நடித்திருப்பார். இதுவும் எப்படி இந்த மாதிரி முடிவை எடுத்தேன் என எனக்கு தெரியவில்லை. திடீரென தயாரிப்பில் குதித்ததும் என்னை சுற்றி இருந்தவர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


தைரியமான முடிவு:

இருந்தாலும் தைரியமாக இந்த முடிவை எடுத்து இந்த படத்தை தயாரித்தோம். நல்ல வேளையாக மாநில அரசின் சிறந்த குடும்ப படம் என்ற விருதை இந்த படம் பெற்றுக் கொடுத்தது என கூறினார் தேவயானி. தற்போது இரு மகள்களுடன் தனது குடும்பத்தை சந்தோஷமாக கழிக்கும் தேவயானி தற்போது எந்த படங்களிலும் நடிக்கவில்லை.

Tags:    

Similar News