இளையராஜா சொன்ன அட்வைஸில் எழுதிய பாடல்தான் அது.. எப்படி ஹிட்டாச்சு பாருங்க
தெய்வக்குழந்தை: இளையராஜாவை ஒரு தெய்வக்குழந்தை என்று ஏன் சொல்கிறார்கள் என்பதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன. அவரிடம் கலையரசி குடி கொண்டிருக்கிறாள் என்றெல்லாம் கூறுவார்கள். அவர் ஹார்மோனியத்தில் இசையரசி உட்கார்த்திருக்கிறாள் என பல பேர் புகழ்ந்து பாராட்டியிருக்கிறார்கள். அந்தளவுக்கு இசையில் மிகப்பெரிய சாதனையை படைத்தவர் இளையராஜா.
பாட்டு எழுத யோசிக்கணுமா?: இவரை பற்றி பிரபல பாடல் ஆசிரியர் யுகபாரதி ஒரு சுவாரஸ்ய தகவலை பகிர்ந்திருக்கிறார். இதோ அவர் கூறியது: ஒருமுறை பாட்டு எழுதும் போது எழுதிக் கொண்டே இருந்தேன். அரை மணி நேரம் ஆகிவிட்டது. இளையராஜா டியூன் கொடுத்ததும் அங்கேயே எழுத வேண்டும். எழுதிக் கொண்டே இருந்தேன். டீ குடித்தேன். அப்புறம் எழுந்து போனேன் .நடந்தேன் .திரும்பவும் வந்து எழுத ஆரம்பித்தேன். உடனே இளையராஜா அவருடைய ரெக்கார்டிங் தியேட்டருக்குள் போய்விட்டு அதற்குள் மேலும் இரண்டு டியூன்களை போட்டுவிட்டு வெளியே வந்தார்.
யோசிச்சா பாட்டு வராது: வந்து எழுதிட்டியாப்பா என்று கேட்டார். யோசிச்சுகிட்டு இருக்கேன் என சொன்னேன். யோசிக்கிறீயா ?பாட்டு எழுத யோசிக்கிறீயா அப்படின்னு கேட்டாரு. யோசிக்காமல் எப்படி பாட்டு எழுதுவது என நான் திகைத்தேன் .இல்லைய்யா நான் வந்து கொஞ்சம் புதுசா யோசிக்கிறேன் என்று சொன்னேன். அதற்கு திங்க் பண்ணா புதுசா எதுவும் வராதுடா என கூறினார்.
ஞானோதயம்: அதைக் கேட்கும் போது ஏதோ ஞானவன் வார்த்தை மாதிரி இருந்தது .என்ன சொல்றீங்க என்று மறுபடியும் அவரிடம் கேட்டேன். யோசனை என்பது அறிவு சார்ந்தது. கலை என்பது மனசு சார்ந்தது. இந்த டியூனை கேட்டதும் உனக்கு என்ன தோணுதோ அதை எழுது அப்படின்னு சொன்னாரு. அது எனக்கு சட்டென ஞானோதயம் பிறந்தது போல இருந்தது .அதற்கு பிறகு நான் எழுதிய பாடல்கள் தான் மிகப்பெரிய வெற்றியடைந்தது.
அவர் சொன்னதுக்கு பிறகு நான் எழுதிய பாடல் தான் கும்கி ,மைனா என வரிசையாக அத்தனை பாடல்களுமே மிகப்பெரிய ஹிட். அதன்பிறகு ஏறக்குறைய 90 பாடல் எழுதி இருப்பேன். அது எல்லாமே ஹிட் .இதற்கெல்லாம் காரணம் இளையராஜா சொன்ன அந்த வார்த்தைதான். யோசிக்காமல் எழுது அப்படின்னு அவர் சொன்னதனால்தான். அவர் யோசிக்காமல் எழுதுன்னு எதை சொன்னார் என்றால் அறிவு கொண்டு யோசிப்பது.
அதாவது அந்த சொற்களை சந்தத்தை கேட்டு அந்த மாத்திரத்தில் என்ன தோன்றுகிறதோ அதை எழுத வேண்டும். அதுதான் பாடல் எழுதுவதில் முக்கியமான ஒரு யுக்தி .அந்த யுத்தி எனக்கே ஒரு 400 பாடல் எழுதிய பிறகு தான் தெரிந்தது. இதற்கெல்லாம் ஒரே காரணம் இளையராஜா தான் என கவிஞர் யுகபாரதி ஒரு மேடையில் பேசும்போது கூறி இருக்கிறார்.