மண்வாசனையில் பாண்டியன் நடிக்கும் முன்பே தேர்வானவர்... ரிஜெக்ட்டுக்கு அதுதான் காரணமா?

By :  SANKARAN
Published On 2025-05-30 09:52 IST   |   Updated On 2025-05-30 09:52:00 IST

80களில் கமல் போல அழகான நடிகர்களாக மோகன் உள்பட பலர் இருந்தனர். அவர்களில் ஒருவர்தான் எஸ்.என்.வசந்த். 83ல் பாரதிராஜா மண்வாசனை படத்தைத் தொடங்கினார். அதற்காக இளம் நடிகர்களை அழைத்து பாரதிராஜா ஆடிசன் நடத்தினார். அதில் தேர்வானவர் எஸ்என்.வசந்த். அவர் சென்னைக்காரர். கதையோ மதுரைக்களம்.

அதனால் அவருக்கு மதுரை பாஷை பேசுவதில் சிக்கல் ஏற்பட்டது. பயிற்சி கொடுத்தும் கேமரா முன்னால் அவரால் அப்படி பேச முடியவில்லை. அது தவிர ரேவதிக்கும் அவர் பொருத்தமான ஜோடியாக இல்லை. இதனால் வேறு ஹீரோவைத் தேட ஆரம்பித்தார் பாரதிராஜா. படத்திற்கு கமல், ரஜினி மாதிரி முன்னணி நடிகர்கள் அந்தப் படத்துக்குத் தேவைப்படவில்லை. புதுமுகம் தான் தேவையாக இருந்தது. அதனால் பாரதிராஜா தொடர்ந்து கதாநாயகன் தேடுதல் வேட்டை நடத்தினார்.

மதுரைக்கு லொகேஷன் பார்க்கச் சென்றார். அப்போது மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சாமி கும்பிட சென்றார். அங்கு வளையல் கடையில் பாண்டியன் வேலை பார்த்துக் கொண்டு இருந்தார். பார்த்த உடனே இவன்தான் நம்ம படத்துக்கு ஹீரோ என தீர்மானித்தார் பாரதிராஜா.


ஆனாலும் எஸ்என்.வசந்திடம் பாரதிராஜா, 'இந்தப் படத்துக்கு நீ மேட்சா இல்ல. ஆனாலும் உன்னை நான் ஏமாற்ற விரும்பல. என் தம்பி ஜெயராஜ் ஒரு படம் தயாரிக்கிறான். அதுல நீ தான் ஹீரோ'ன்னு சொன்னார். அதுதான் மெல்லப் பேசுங்கள் படம். பாரதி வாசு இயக்கினார். பானுப்பிரியா ஜோடியாக நடித்தார். இவருக்கும் இதுதான் முதல் படம்.

இந்தப் படத்துக்குப் பிறகு சில படங்களில் நடித்தார் எஸ்.என்.வசந்த். ஆனாலும் முன்னுக்கு வர முடியவில்லை. டிவி தொடர்களில் நடித்தார். 2009ல் மாரடைப்பால் காரணமானார். இவர் மட்டும் மண்வாசனையில் தேர்வாகி இருந்தால் இவரது சினிமா வாய்ப்பே பிரகாசமாகி இருக்கும். இந்த விஷயத்தை அவரே பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News