பொங்கல் வந்தாலே எம்ஜிஆருக்கு இதுதான் வேலை..! நம்பியார் சொன்ன தகவல்
மக்கள் திலகம், புரட்சித்தலைவர், பொன்மனச்செம்மல் என்று அழைக்கப்படுபவர் எம்ஜிஆர். இவர் வாரி வாரி வழங்கும் கொடை வள்ளல் என்றால் அது மிகையில்லை. அப்படி என்ன செய்தாருன்னு பார்க்கலாமா...
பிறப்பால் மலையாளியாக இருந்தாலும் தமிழ் மக்கள் மேல் எம்ஜிஆர் வைத்திருந்த பற்றுக்கு அளவே கிடையாது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பே தமிழகத்துக்கும், மக்களுக்கும் நிறைய நல்ல விஷயங்களைச் செய்துள்ளார் எம்ஜிஆர்.
நம்பியார்: எம்ஜிஆரைப் பொருத்தவரை அவருக்கு பிறப்பிலேயே பிறருக்குத் தன்னால் ஆன உதவிகளைச் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்ற ஒரு குணம் உண்டு என்றே தோன்றுகிறது. அதனால்தான் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், ஏன் தான் சிறுவனாக இருக்கும்போதும் கூட இத்தகைய உதவிகளைச் செய்துள்ளார் என்பதன் மூலம் நாம் உணர முடிகிறது.
எம்ஜிஆரைப் பொருத்தவரை நலிந்த கலைஞர்கள் மற்றும் நட்பு வட்டாரத்தில் உள்ளவர்களுக்கு பொங்கல் அன்று புத்தாடை, பொங்கல் சீர்வரிசை கொடுத்து அனைவருடனும் சேர்ந்து கொண்டாடுவாராம். இதை வில்லன் நடிகர் நம்பியாரே சொல்லி இருக்கிறார்.
பொங்கல் கிப்ட்: இதற்காகவே ஏராளமானோர் பொங்கல் அன்று எம்ஜிஆரிடம் சென்று வாழ்த்து பெறுவார்கள். காலையில் இருந்து இரவு வரை மக்கள் வந்துகொண்டே இருப்பார்களாம். புத்தாடை, சமையல்பொருள்கள், பணம் என எல்லாவற்றையும் வைத்துக் கொடுப்பாராம். அதனால் மக்கள் எம்ஜிஆர் சொல்லாமலேயே வந்து குவிந்துவிடுவார்களாம்.
இப்போதும்கூட அவரது பிறந்தநாளை ரசிகர்கள் மறக்காமல் ஆண்டுதோறும் கொண்டாடுகிறார்கள். மக்களுக்கு இனிப்பு வழங்குகிறார்கள். இலங்கையிலும் இதே போல ரசிகர்கள் கொண்டாடுவார்களாம். நினைவுநாளில் துக்கதினத்தையும் மறக்காமல் அனுஷ்டித்து வருகிறார்கள்.
ஜனவரி 17: தமிழர்திருநாளாம் பொங்கல் பண்டிகையை தமிழகத்தில் சீரும் சிறப்போடும் 3 தினங்களாகக் கொண்டாடுவர். அந்த வகையில் அதையொட்டியே எம்ஜிஆரின் பிறந்தநாளும் ஜனவரி 17ம் தேதி அன்று வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டு எம்ஜிஆரின் பிறந்தநாளன்று அரசு விடுமுறையும் அறிவித்துள்ளது. இந்த தினத்தில் எம்ஜிஆரின் நினைவைப் போற்றும் வகையில் ரசிகர்கள் பலரும் அவரது நினைவிடத்துக்கும் சென்று வருவார்கள்.