ஒரு லட்சத்திற்கும் குறைவான பட்ஜெட்டில் பாரதிராஜா இயக்கிய படம்!.. வசூல் எவ்வளவு தெரியுமா?...

By :  Rohini
Update:2025-03-08 22:00 IST

16 வயதினிலே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இயக்குனர் பாரதிராஜா. இவர் பெரும்பாலும் புதுமுக நாயகியகள் ஹீரோக்களை வைத்தே படத்தை எடுப்பார். அப்படி பல ஹீரோயின்களை அறிமுகம் செய்திருக்கிறார் பாரதிராஜா. இவரால் அறிமுகம் செய்தவர்கள் பலர் இன்று பெரிய முன்னணி நடிகர்களாகவும் நடிகைகளாகவும் மாறி இருக்கின்றனர்.

அதைப்போல சினிமாவிலும் திறமையான கலைஞர்களாகவும் வளர்ந்து இருக்கின்றனர். இவருடைய காலத்தில் இப்போது இருக்கிற மாதிரி பெரிய பெரிய பட்ஜெட்டில் எல்லாம் படங்கள் எடுக்கப்படவில்லை. குறுகிய பட்ஜெட்டில் நல்ல கதைக்களம் கொண்ட படங்களாகவே வெளிவந்து அந்தப் படங்களும் மாபெரும் வெற்றியாகி பட்ஜெட்டை விட அதிகமான வசூலை தயாரிப்பாளர்களுக்கு ஈட்டி தந்திருக்கின்றன.

இன்றைய சூழலில் ஒரு நடிகருக்கோ அல்லது நடிகைக்கோ கோடிக்கணக்கில் பணத்தை செலவிட வேண்டி இருக்கிறது. ஆனால் பாரதிராஜா, பாலச்சந்தர், பாக்கியராஜ் இவர்களின் காலத்தில் சில லட்சங்களில் படத்தை முடித்து அந்த படத்தையும் வெற்றிப் படங்களாக்கி இருக்கின்றனர். அந்த வகையில் ஒரு லட்சத்திற்கும் குறைவான பட்ஜெட்டில் ஒரு படத்தை எடுத்து அந்தப் படத்தை மாபெரும் வெற்றியாக்கி இருக்கிறார் பாரதிராஜா.

அந்தப் படம்தான் புதிய வார்ப்புகள். முதலில் இந்த படத்தில் புதுமுக நாயகன் நாயகியையே நடிக்க வைக்க திட்டமிட்ட இருந்தாராம் பாரதிராஜா. ஆனால் நடிகர்கள் கிடைக்கவில்லை. எனவே, தன்னிடம் உதவி இயக்குனராக பணியாற்றிக் கொண்டிருந்த பாக்கியராஜையே இந்த படத்தில் நாயகனாக போடலாம் என்ற ஒரு எண்ணம் பாரதிராஜாவுக்கு தோன்றியது.

பின்னர் பாக்யராஜ் நடித்து அவருக்கு ஜோடியாக ரதி நடிக்க உருவான திரைப்படம் தான் புதிய வார்ப்புகள். இந்த படத்திற்காக இளையராஜா புதுப்புது புத்திகளை யோசித்து இசையமைத்திருந்தார். இந்த நிலையில் புதிய வார்ப்புகள் படத்திற்கான மொத்த பட்ஜெட் எவ்வளவு, அதை எப்படி திட்டமிட்டு எடுத்தார்கள் என்பதை பற்றிய ஒரு தகவல் இப்போது வெளியாகி இருக்கின்றது.

இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பு 32 நாட்கள் தானாம். ஒரு நாளைக்கு 3000 ரூபாய் என்ற விதத்தில் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறார்கள். அந்த வகையில் மொத்தமே 94 ஆயிரம் ரூபாய் செலவில் தான் மொத்த படப்பிடிப்பையும் எடுத்து முடித்தார்களாம். இதைப் பற்றி சித்ரா லட்சுமணன் மேலும் கூறும் பொழுது லட்சத்திற்கும் குறைவான அளவில் படத்தை எடுத்து 18 லட்சம் வரைக்கும் இந்த படம் வசூலை குவித்துள்ளதாக ஒரு பேட்டியில் சித்ரா லட்சுமணன் கூறினார்.


ஆனால் இப்போதைய காலகட்டத்தில் ஒரு நடிகையின் பேட்டா தொகையே லட்ச ரூபாயிலிருந்து ஆரம்பிக்கிறது. அப்போதைய காலகட்டத்தில் எந்த அளவுக்கு திட்டமிட்டு படத்தை எடுத்திருக்கிறார்கள் பாருங்கள் என சித்ரா லட்சுமணன் கூறியிருக்கிறார்.

Tags:    

Similar News