படத்துல ஹீரோ ரஜினி மட்டும்தான்.. விஜயசாந்தி ஆட்டிட்யூட்டால் கடுப்பான வாசு

By :  Rohini
Update: 2025-01-20 10:55 GMT

லேடி சூப்பர் ஸ்டார்: சூப்பர் ஸ்டாரும் லேடி சூப்பர் ஸ்டாரும் இணைந்த படம் மன்னன். பி வாசு இயக்கத்தில் அந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படத்தில் கவுண்டமணி ரஜினிக்கு இடையேயான காமெடி பெரிய அளவில் வொர்க் அவுட் ஆனது. அதிலும் தியேட்டரில் படம் பார்க்க முண்டி அடித்துக்கொண்டு போகும் அந்த காட்சி இன்றளவும் ரசிகர்களை கொள் என சிரிக்க வைக்கிறது.

மிகவும் பீக்கில் இருந்த நடிகை: படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்தி திமிரு பிடித்த ஒரு பெண்ணாக நடித்திருப்பார். அதன் பிறகு அவரை ரஜினி திருமணம் செய்து கொண்டு அவருடைய திமிரை அடக்குவது மாதிரியான கதைதான் இந்த மன்னன் திரைப்படத்தின் கதை. படத்தில் குஷ்பூ ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்திருப்பார். இந்த படத்தில் நடிக்கும் பொழுது தெலுங்கில் மிகவும் பீக் நடிகையாக இருந்தார் விஜயசாந்தி.

உண்மையிலேயே அப்படித்தானா? பல படங்களில் நடித்து ஒரு முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை தெலுங்கில் தக்கவைத்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் தான் மன்னன் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு வந்தது. அதனால் அந்த ஒரு கெத்து பெருமை இவையெல்லாம் சேர்ந்து விஜயசாந்தி இந்த படத்தில் அந்த கேரக்டரில் எப்படி இருந்தாரோ அப்படியே தான் அவருடைய நடவடிக்கையும் உண்மையிலேயே இருந்ததாம்.

ஏற்கனவே பி வாசு பார்ப்பதற்கு மிலிட்டரி மேன் மாதிரி இருப்பார். அவருக்கு இந்த மாதிரி இருந்தால் பிடிக்காது. சில நேரங்களில் வாசுவுடன் விஜயசாந்திக்கு கருத்து வேறுபாடு எல்லாம் நடந்ததாம். அப்போது வாசு இந்த படத்தில் ரஜினி தான் ஹீரோ. நீங்க இல்ல என முகத்திற்கு எதிராக சொல்லிவிட்டாராம். அதன் பிறகு இந்த படம் வெற்றி அடைந்து விஜயசாந்தியும் வாசுவை அழைத்து படத்தின் வெற்றியை பகிர்ந்து கொண்டாராம். இந்த தகவலை வாசுவின் உதவி இயக்குனர் ஒருவர் பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.


விஜயசாந்தியை பொறுத்த வரைக்கும் நடிகையாக மட்டுமல்லாமல் அரசியல்வாதியாகவும் வெற்றி வாகை சூடியவர். தற்போது கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் மட்டுமே தெலுங்கு நடித்து வருகிறார். பெரும்பாலும் போலீஸ் கேரக்டரிலேயே நடித்த விஜயசாந்தியின் ஃபைட் காட்சிகள் அனைவரையும் அசர வைத்திருக்கிறது .விஜயசாந்தி படம் என்றாலே அவருடைய ஃபைட்டை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாக இருப்பார்கள். முதல் ஒரு கோடி சம்பளம் வாங்கிய முதல் நடிகை விஜயசாந்திதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News