கங்குவா படத்துக்கு வந்த 600 கோடி ஆஃபர்!.. அதிகமா ஆசைப்பட்டு கடைசியில குச்சி ஐஸ்தான் மிச்சம்!..

By :  MURUGAN
Update: 2025-05-14 12:55 GMT

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா வித்தியாசமான தோற்றத்தில் நடித்து உருவான திரைப்படம் கங்குவா. இந்த படத்திற்கு அதிக ஹைப் ஏற்றினார்கள். ஏனெனில், சூர்யாவின் கெட்டப் மற்றும் படத்தின் போஸ்டர் எல்லாம் ஹாலிவுட் படங்களை நியாபகப்படுத்தியது. அதோடு, கேம் ஆப் த்ரோன் போல தமிழில் ஒரு படத்தை எடுக்க முயற்சி செய்திருக்கிறேன் என சிவா பேட்டியெல்லாம் கொடுத்தார்.

படம் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாவதாக சொன்னார்கள். இந்த படத்தை சூர்யாவின் உறவினர் ஞானவேல் ராஜா தயாரித்தார். ஊடகங்களுக்கு இவர் அளித்த பேட்டியில் கங்குவா படத்தை பெருமையாக பேசினார். இப்படம் ஆயிரம் கோடி வசூலிக்குமா என கேட்டதற்கு ‘நீங்கள் குறைவாக சொல்கிறார்கள். நான் இரண்டாயிரம் கோடியை எதிர்பார்க்கிறேன்’ என சொன்னார்.


இப்படத்தில் நடித்தவர்களும் இப்படத்தை பற்றி ஹைப் ஏற்றி பேட்டி கொடுத்தார்கள். இப்படத்தின் புரமோஷன் விழாவில் பேசிய சூர்யா ‘கங்குவா படத்தை பார்ப்பவர்கள் வாயை பிளப்பார்கள்’ என சொன்னார். ஆனால், படம் வெளியானபோது இப்படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தது. முதல் காட்சியை பார்த்துவிட்டு வெளியே வரும் ரசிகர்களிடம் பல யுடியூப் சேனல்கள் கருத்து கேட்டபோது ரசிகர்கள் சில குறைகளை சொன்னார்கள்.

அந்த வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வைரலானதால் படத்தின் வசூல் பாதிக்கப்பட்டது. ஒருபக்கம் சூர்யாவை பிடிக்காத சில கும்பல்களும் படத்திற்கு எதிராக வன்மத்தை கக்கினார்கள். எனவே, பாக்ஸ் ஆபிசில் படம் படுதோல்வி அடைந்தது. ஞானவேல் ராஜாவுக்கு பல கோடிகள் நஷ்டம் ஏற்பட்டதாகவும் சொல்லப்பட்டது.


இந்நிலையில், இந்த பட ரிலீஸுக்கு முன் பெரிய எதிர்பார்ப்பு இருந்ததால் இப்படத்தின் நெகட்டிவ் அதாவது மொத்த உரிமையையும் 600 கோடிக்கு வாங்கிக்கொள்வதாக உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் ஒரு ஆஃபர் கொடுத்திருக்கிறது. ஆனால், படம் 1000 கோடிக்கும் மேல் வசூலிக்கும் என எதிர்பார்த்த ஞானவேல் ராஜா முடியாது என சொல்லிவிட்டாராம்.

இதற்கு மட்டும் சம்மதம் சொல்லி 600 கோடியை வாங்கிக்கொண்டு படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனத்திடம் கொடுத்திருந்தால் நஷ்டத்திலிருந்து தப்பித்ததோடு சில நூறு கோடிகள் அவருக்கு லாபமும் கிடைத்திருக்கும். அதிக நம்பிக்கையில் வந்த பணத்தை விட்டுவிட்டு இப்போது தலையில் துண்டை போட்டு உட்கார்ந்திருக்கிறார் ஞானவேல் ராஜா.

Tags:    

Similar News