சிவாஜி படத்துக்கு அப்பவே வித்தியாசமான புரோமோ..! அதான் மெகா ஹிட்டா?
ஏவிஎம் தயாரிப்பில் பாவ மன்னிப்பு படத்துக்கு ஏவிஎம்.சரவணன் புரொமோஷனை வித்தியாசமாகப் பண்ணலாம்னு நினைத்தார். பொதுவாகவே அவர் மார்க்கெட்டிங் துறையில் நல்ல அனுபவம் வாய்ந்தவர். புதுமையாக ஏதாவது பண்ணனும்னு நினைக்கக்கூடியவர்.
இந்தப் படத்தின் பாடல்கள் மக்களிடம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. அதனால இந்தப் படத்தோட பாடல்களை வைத்து புதுமையாக விளம்பரம் பண்ணலாமேன்னு அவருக்கு ஒரு யோசனை வந்தது. அதுதான் பாவமன்னிப்பு பாடல் போட்டி. அதாவது இந்தப் படத்தின் 8 பாடல்களை பொதுமக்களின் ரசனைக்கேற்ப நம்பர் 1, நம்பர் 2 என வரிசைப்படுத்தணும்.
அப்படித் தேர்வு செய்தவை சரியாக இருக்கும்பட்சத்தில் 10 ஆயிரம் பரிசு வழங்கப்படுவதாகவும் அறிவித்தார்கள். அந்தக் காலத்தில் 10 ஆயிரம் ரூபாய் என்பது மிகப்பெரிய தொகை. இதுல 100 பேரு சரியாக எழுதி இருந்தால் அந்தப் பத்தாயிரத்தையும் பிரிச்சிக் கொடுப்பதாகவும், ஒரு நபர் மட்டும் சரியாக எழுதி இருந்தால் அவருக்கே அந்தப் பத்தாயிரத்தையும் கொடுப்பதாக அறிவித்தனர்.
போட்டி அறிவிக்கப்பட்டது. மக்கள் மத்தியில் இந்தப் பாடலுக்கு எவ்வளவு வரவேற்பு என்பது அதன்பிறகு தான் ஏவிஎம் நிறுவனத்துக்கே தெரிந்ததாம். ஒரு அறை முழுக்க லட்டராக வந்து குவிந்து விட்டதாம். இதனால் இந்தப் பாடல்கள் மிகப்பெரிய அளவில் ரீச்சாயின. படமும் மெகா ஹிட்டானது.
படத்தில் பாடல்களை வரிசைப்படுத்துவதில் படக்குழுவுக்கே கஷ்டமாக இருந்ததாம். அந்த அளவு படத்தில் அத்தனைப் பாடல்களும் சூப்பர்ஹிட். அனைத்தும் கண்ணதாசன் எழுதியவைதான். 8 பாடல்களில் முதலிடம் பிடித்தது சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் என்ற பாடல் தானாம். இந்தப்பாடலைக் கண்ணதாசனும் மிகப் புதுமையாக எழுதி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வரலாறு இந்தியாவிலேயே எங்கும் கிடையாது என்றே சொல்லலாம். 1961ல் வெளியான இந்தப் படத்தை ஏ.பீம்சிங் இயக்கினார். விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை அமைத்துள்ளார். சிவாஜி, சாவித்திரி, தேவிகா உள்பட பலர் நடித்துள்ளனர். அத்தான் என்னத்தான் என்ற பாடலும் இந்தப் படத்தில் தான் இடம்பெற்றது.