விஜய வச்சி படம் எடுக்க வேண்டாம்னு சொன்னேன்!.. திருப்பூர் சுப்பிரமணியம் தடாலடி!..

By :  MURUGAN
Update: 2025-05-12 07:25 GMT

கோலிவுட்டை பொறுத்தவரை விஜயின் கால்ஷீட் யாருக்கு கிடைக்கிறதோ அந்த தயாரிப்பாளரை சிலர் பொறாமையாக பார்ப்பாரக்ள். ஒருபக்கம், விஜயை வைத்து அதிக பட்ஜெட்டில் படமெடுப்பதை ரிஸ்க்காகவும் பார்ப்பார்கள். ஏனெனில், எதிர்பார்த்த வசூலை பெறாவிட்டால் தயாரிப்பாளரின் கதை அதை கதிதான். கார்ப்பரேட் நிறுவனங்கள் என்றால் சமாளித்து விடுவார்கள். ஆனால், தயாரிப்பாளர் தனி நபராக இருந்தால் நிலைமை மோசமாகி விடும்.

எனவேதான், பெரும்பாலும் சன் பிக்சர்ஸ், லைக்கா, ஏஜிஎஸ், மைத்ரி மூவி மேக்கர்ஸ் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் பெரிய நடிகர்களை வைத்து படமெடுக்க முன்வருகிறார்கள். ஏனெனில், ஹீரோக்களுக்கு 200 கோடி சம்பளம் இல்லாமல் மற்ற சம்பளம், பட்ஜெட் என மொத்த செலவு 300 கோடியை தாண்டிவிடும்.


ஆனால், 90களில் அறிமுக இயக்குனர்களை வைத்து மிகவும் குறைவான பட்ஜெட்டில் படங்களை எடுத்து வெற்றி பெற்று காட்டியவர்தான் சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி. பல இயக்குனர்களை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். விஜயை வைத்து துள்ளாத மனமும் துள்ளும், லவ் டுடே, ஷாஜகான், திருப்பாச்சி போன்ற வெற்றிப்படங்களை கொடுத்திருக்கிறார்.

சூப்பர் ஹிட் பிலிம்ஸ் நிறுவனம் 95 படங்களுக்கும் மேல் தயாரித்துவிட்டது. 100வது படத்தை விஜயை வைத்து தயாரிக்க வேண்டும் என்கிற ஆசை சவுத்ரிக்கு இருந்தது. பலமுறை விஜயை சந்தித்து இதுபற்றி பேசினார். ஆனால், விஜயோ பிடி கொடுக்கவில்லை. ஏனெனில், தான் இப்போது வாங்கும் சம்பளத்தை ஆர்.பி.சவுத்ரியால் கொடுக்க முடியாது என அவர் நினைத்ததே அதற்கு காரணம் என சொல்லப்பட்டது.


இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய வினியோகஸ்தர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் ’தங்களின் 100வது படத்தை விஜயை வைத்து தயாரிக்க ஆர்.பி.சவுத்ரி ஆசைப்படுவதாக என்னிடம் சொன்னபோது நான் வேண்டாம் என சொன்னேன். விஜய்க்கு 200 கோடி சம்பளம், இயக்குனருக்கு 50 கோடி, பட்ஜெட் 100 கோடி என பார்த்தால் 350 கோடி பட்ஜெட் வரும். விஜய் உடனே கால்ஷீட் கொடுக்க மாட்டார். அட்வான்ஸ் கொடுத்துவிட்டு நீங்கள் ஒரு வருடம் காத்திருக்க வேண்டும். ஓடிடி நிறுவனங்கள் முன்பு போல பணம் கொடுப்பது இல்லை. எனவே, ரிஸ்க் அதிகம். உங்களுக்கும் 80 வயது ஆகிவிட்டது. இருக்கும் பணத்தை வைத்துக்கொண்டு மகிழ்ச்சியாக இருங்கள்’ என சொல்லிவிட்டேன் ஒருகட்டத்தில் ஆர்.பி.சவுத்ரியும் அதை புரிந்துகொண்டார்’ என பேசியிருக்கிறார்.

இப்போது விஜயே ஜனநாயகனோடு சினிமாவை விட்டு போய்விடுவார் போல தெரிகிறது. இனிமேல் அஜித் மட்டுமே இருக்கிறார். ஆனால், அஜித், ரஜினி போன்ற நடிகர்களுக்கெல்லாம் ஆ.பி.சவுத்ரியால் சம்பளம் கொடுக்க முடியாது என்பதே நிஜம்.

Tags:    

Similar News