நடிகர் சொன்ன கதையை சுட்டு படமாக எடுத்த வெங்கட்பிரபு!. சொந்த சரக்கு ஒன்னுமே இல்லையா!...
Venkat Prabu: இசைஞானி இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரனின் மூத்த மகன்தான் வெங்கட் பிரபு. சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஒரு கட்டத்தில் இயக்குனராக வேண்டும் என முடிவெடுத்தார். தன்னுடைய நண்பர்கள் கூட்டத்தை வைத்து கிரிக்கெட் கலந்த காதல், காமெடி படத்தை எடுத்தார். அப்படி உருவான சென்னை 28 திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது.
அடுத்து சரோஜா, கோவா, மங்காத்தா, மாஸ் என்கிற மாசிலா மணி, பிரியாணி, மாநாடு உள்ளிட்ட பல படங்களையும் இயக்கினார். விஜயை வைத்து கோட் என்கிற படத்தை இயக்கினார். இந்த படம் சுமாரான வெற்றியையே பெற்றது 400 கோடி செலவில் உருவான இப்படம் 450 கோடி மட்டுமே வசூல் செய்தது.
கோட் படத்திற்கு பின் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்கும் முயற்சியில் இருந்தார். ஆனால், சிவகார்த்திகேயன் பல படங்களிலும் நடித்து வருவதால் இவருக்கு பிடி கொடுக்கவில்லை. அதோடு, கோட் பெரிய வெற்றி இல்லை என்பதால் வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் தயங்குவதாக சொல்லப்படுகிறது.
வெங்கட்பிரபு இயக்கும் படங்களில் பெரிதாக கதையே இருக்காது. 4 நண்பர்கள் ஜாலியாக சரக்கடிப்பது, டேன்ஸ் ஆடுவது, ஒரு பெண்ணை காதலிப்பது, ஒரு கவர்ச்சி பாடல் என எதையாவது வைத்து ஒப்பேற்றுவார். இதில் ஒரு படம்தான் கோவா. இந்த படத்தில் ஜெய், பிரேம்ஜி, வைபவ், பியா பைஜூ, சினேகா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
இந்த படத்தில் Gay வேடத்தில் சம்பத் ராஜ் நடித்திருந்தார். இவரையும் பிரேம்ஜியையும் இணைந்து அரவிந்த் ஆகாஷ் சந்தேகப்படும்படியெல்லாம் காட்சிகளை வைத்திருந்தார் வெங்கட்பிரபு. இந்த படத்தை ரஜினியின் மகள் சௌந்தர்யா ரஜினிகந்த் தயாரித்திருந்தார். யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் ஹிட் அடித்தாலும் படம் சூப்பர் ஹிட் அடிக்கவில்லை.
இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய சம்பத் ராஜ் ‘நான் சொன்ன கதையைத்தான் கோவா என்கிற பெயரில் பிரபு படமாக எடுத்தான். ‘அந்த Gay வேடத்தில் யாரை நடிக்க வைக்கப்போற?’ என நான் கேட்டதும் எதுவும் சொல்லமால் சிறிது நேரம் அழைத்து சென்று ‘நீதான் நடிக்கப்போற’ என சொல்லிவிட்டு ஓடிவிட்டான். நான் அவனை துரத்தினேன். நான் அவனை அடிக்கப்போகிறேன் என பயந்து அவன் ஓடினான். ஆனால், நான் சந்தோஷத்தில் அவனுக்குக் நன்றி சொல்லவே அவனை துரத்தினேன். என்னை நம்பி அப்படி ஒரு வேடத்தை அவன் கொடுத்தான்’ என ஜாலியாக பேசியிருந்தார்.
தனது அப்பா கங்கை அமரன் சொன்ன கதையைத்தான் மங்காத்தாவாக படமெடுத்தார் வெங்கட்பிரபு. இப்போது கோவாவும் அவரின் கதை இல்லை என்பது தெரியவந்திருக்கிறது.