நாயகன் படத்தில் நாசர் வேடத்தில் முதலில் நடிக்க இருந்தது இவரா? கமலுடன் காம்போ ஜஸ்ட் மிஸ்!
மணிரத்னம் இயக்கத்தில் வேலுநாயக்கராக கமல் கம்பீரத்துடன் நடித்து வெளியான படம் நாயகன். இந்தப் படத்தில் கமலின் நடிப்பு பட்டி தொட்டி எங்கும் பேசப்பட்டது. சிறுவயதில் இருந்து வயதானவர் வரை தனது உடல் மொழியை லாவகமாக மாற்றி நடித்து அப்ளாஸை அள்ளி இருப்பார். இந்தப் படத்தில் நாசர் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து இருந்தார். இந்த வேடத்திற்கு முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா?
கமலுடன் ஒரு படத்தில் கூட இணைந்து நடிக்காத ரகுவரன்தான். அப்புறம் அவர் எப்படி மிஸ் ஆனார்னு பாருங்க. வில்லத்தனத்தை வேறு லெவலில் காட்டி மிரட்டுபவர் ரகுவரன். இவர் நடிப்புக்கு முன்னால் ஹீரோக்களே சில சமயம் தோற்று விடுவர்.
அதனால் ஜாக்கிரதையாகத் தான் நடிப்பார்கள். அப்படித்தான் கமலுடனும் இவர் நடிக்காததற்கான காரணத்தைப் பற்றிப் பலரும் சொன்னார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. நாயகன் படத்தில் நாசர் வேடத்தில் நடிப்பதற்காக ரகுவரனிடம் முதலில் பேசி இருக்கிறார்கள்.
அதாவது படத்தில் கமலோட மகளின் கணவர். இவர் காவல் உதவி ஆணையராக இருக்கிற கேரக்டர். இந்த ரோலுக்கு ரகுவரனும் ஓகே சொல்லி விட்டாராம். ஆனால் முழு கதையையும் கேட்ட பிறகு படத்தில் நடிக்க மறுத்து விட்டாராம்.
கமலுடன் நடிப்பது பற்றி சொன்னதும் அவர் மறுத்துவிட்டாராம். கமல்தான் நாசரை நடிக்க வைக்கலாம் என்று மணிரத்னத்திடம் சொன்னாராம். என்னை ஏன் இந்த படத்தில் நடிக்க பரிந்துரைத்தீர்கள்னு கமலிடம் கேட்டாராம் நாசர். அது போக போக அவருக்கே தெரிந்து விட்டதாம். அந்தக் கேரக்டர் எவ்வளவு முக்கியமானது என்று. அதே நேரம் ரகுவரனின் மனைவி ரோகினி ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார்.
அதாவது கமலுடன் ஏன் ரகுவரன் நடிக்கவில்லை என்று கேள்வி கேட்டதற்கு இப்படி பதில் சொன்னாராம். ரகுவரன் அந்த ரோலுக்காக தலைமுடியை வெட்ட வேண்டி இருந்த காரணத்தால் தான் அந்தப் படத்தில் நடிக்க மறுத்து விட்டார் என்று தெரிவித்து இருந்தார். போலீஸ் கெட்டப் என்றால் ட்ரிம்மாகத் தானே இருக்க வேண்டும். இதில் என்ன இருக்கு என்று கேட்கலாம். ஆனால் ரகுவரனின் மனநிலை குறித்து அவரது மனையாளுக்குத் தானே தெரியும்.
1987ல் வெளியான நாயகன் படத்தில் கமல் உடன் சரண்யா, ஜனகராஜ், நாசர் உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தில் இளையராஜா இசை அமைத்துள்ளார். பாடல்கள் எல்லாமே தேன் சொட்டும் ரகங்கள். நிலா அது, நான் சிரித்தால், அந்திமழை, நீ ஒரு காதல் சங்கீதம் உள்பட பல சூப்பர்ஹிட் பாடல்கள் உள்ளன.