அமீர் எனக்கு எப்பையுமே அண்ணன் தான்.. அய்யா என்னை மன்னிச்சிடுங்க.. ஞானவேல்ராஜா ட்வீட்..

by Akhilan |
அமீர் எனக்கு எப்பையுமே அண்ணன் தான்.. அய்யா என்னை மன்னிச்சிடுங்க.. ஞானவேல்ராஜா ட்வீட்..
X

Gnanavelraja: தமிழ் சினிமாவில் கடந்த சில நாட்களாகவே ஓயாத பிரச்னையாகி இருப்பது ஞானவேல்ராஜா மற்றும் அமீர் இடையே இருக்கும் வார்த்தை போர் தான். அமீர் குறித்து ஞானவேல்ராஜா கொடுத்த பேட்டி ஒன்று வைரலான நிலையில் பெரிய பிரச்னையாகி இருக்கிறது.

அமீரை கார்த்தி25க்கு அழைக்காமல் போக அவரிடம் அது கேள்வியாக வைக்கப்பட்டது. அதில் அவர் பேசிய சில விஷயங்கள் பரபரப்பானது. இதை விட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கொடுத்த பேட்டி தான் அவருக்கே பிரச்னையாகி இருக்கிறது. அதில் நிறைய விஷயங்களை பேசி இருந்தார்.

இதையும் படிங்க: நீங்க அமைதியா இருக்கது தப்பு.. கார்த்திக்கு குட்டு வைத்த ’பருத்திவீரன்’ குட்டி சாக்கு…

இதற்கு பதிலடியாக அமீர் நான் இப்படியே தான் இருப்பேன். நீ வேண்டும் என்றால் நடிகர் பின்னாடி ஒளிந்துக்கொள். இந்த விஷயம் தெரிந்தவர்கள் கூட அமைதியாக இருப்பது ஆச்சரியமளிப்பதாக பேசி இருந்தார். அதை தொடர்ந்து சசிகுமார், அமீர் என்னிடம் கடன் வாங்கி தான் அந்த படத்தினை முடித்தார். அதை ஞானவேல்ராஜா அடைக்கவில்லை என்றும் ஆதரவாக ட்வீட்டினார்.

இதையும் படிங்க: மாஸ் காட்டி வைரலான மீனா..! சைடு கேப்பில் காரியத்தினை சாதிக்க திட்டம் போட்ட விஜயா.. மீண்டும் ஆரம்பித்த ஸ்ருதி..!

இந்நிலையில் ஸ்டுடியோ க்ரீன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் இருந்து ஞானவேல்ராஜா தற்போது ஒரு விளக்க ட்வீட்டை வெளியிட்டு அதில் மன்னிப்பும் கேட்டு இருக்கிறார். அதில், பருத்திவீரன் பிரச்னை கடந்த 17 ஆண்டுகளாக நடந்து வருகிறது. நான் இதுநாள் வரை அதுபற்றி எதுவும் பேசியது இல்லை.

அவரை ஆரம்பத்தில் இருந்தே அமீர் அண்ணா என்று தான் குறிப்பிடுவேன். அவர் குடும்பத்துடன் நெருங்கி பழகியவன். அவர் சமீபத்திய பேட்டியில் என் மீது சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை காயப்படுத்தியது. அதற்கு விளக்கம் அளிக்கும் போது நான் பேசிய சில வார்த்தைகள் அவர் மனதினை புண்படுத்தி இருந்தால் நான் மனமார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்டு இருந்தார்.

இதையும் படிங்க: ஏலேய் எங்களை பாத்தா எப்படி தெரியுது..? மூணு நாளா ஒரே சண்டையை வச்சு ஓட்டும் பாக்கியலட்சுமி டீம்..!

Next Story