கோட் படத்துல விஜயகாந்துக்கு இந்த ரோலா? அவரே டபுள் ஓகே சொல்லிட்டாரே..!

வெங்கட்பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் படம் கோட் (GOAT). அரசியலுக்கு முன்பாக நடிக்கும் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் வந்துள்ளன. அதுமட்டும் அல்லாமல் படத்தில் கேப்டன் விஜயகாந்தையும் ஏஐ தொழில்நுட்பத்தில் அட்டகாசமாக காட்டி இருக்கிறார்களாம். இதனால் இரு தரப்பு ரசிகர்களிடமும் இப்போது இருந்தே வரவேற்பு வந்துவிட்டது. படம் எப்போ ரிலீஸ் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். ஏஜிஎஸ் தயாரிப்பு. யுவன் சங்கர் ராஜா இசை. இப்போது சூட்டிங் முடிந்துவிட்டது. போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் […]

By :  sankaran v
Update: 2024-05-21 02:14 GMT

GOAT

வெங்கட்பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் படம் கோட் (GOAT). அரசியலுக்கு முன்பாக நடிக்கும் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் வந்துள்ளன. அதுமட்டும் அல்லாமல் படத்தில் கேப்டன் விஜயகாந்தையும் ஏஐ தொழில்நுட்பத்தில் அட்டகாசமாக காட்டி இருக்கிறார்களாம். இதனால் இரு தரப்பு ரசிகர்களிடமும் இப்போது இருந்தே வரவேற்பு வந்துவிட்டது. படம் எப்போ ரிலீஸ் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

ஏஜிஎஸ் தயாரிப்பு. யுவன் சங்கர் ராஜா இசை. இப்போது சூட்டிங் முடிந்துவிட்டது. போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. உலகத்தரத்துடன் தயாராகி வருவதால் படம் வெளியாக சற்றுத் தாமதமாகிறதாம். ஆகஸ்ட் மாதம் வெளியாகும் சூழலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது படம் செப்டம்பர் 5 விநாயகர் சதுர்த்திக்கு ரிலீஸ் ஆகும் எனத் தெரிகிறது.

GOAT2

படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மோகன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும் கேப்டன் விஜயகாந்துக்கு என்ன ரோல் என பார்ப்போம். படத்தின் இயக்குனர் வெங்கட்பிரபு கேப்டன் வரும் காட்சிகளை பிரேமலதாவிடம் போட்டுக் காண்பித்தாராம். அதைப் பார்த்ததும் முழு திருப்தி அடைந்த அவர் டபுள் ஓகே சொல்லிவிட்டாராம்.

இந்தப் படம் விஜயகாந்துக்கு கூடுதல் பெருமையை சேர்க்கும் என்றும் சொல்கிறார்கள். படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் வரும் விஜயகாந்த் சீன் அட்டகாசமாக இருக்கும் என்றும் பேசப்பட்டு வருகிறது. 93ல் வெளியான செந்தூரப்பாண்டிக்குப் பிறகு அதாவது 31 ஆண்டுகளுக்குப் பின் விஜயகாந்துடன் இணைகிறார் விஜய். அப்படி என்றால் படத்துக்கு மவுசு இருக்கத்தானே செய்யும்.

இதையும் படிங்க... சூப்பர்ஸ்டாருக்கு இப்படி ஒரு அசாத்திய திறமையா? கேட்கும்போதே புல்லரிக்குதே…!

ஏ.ஐ. (AI)தொழில்நுட்பம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு புதுமையான விஷயம். அது எப்படி உயிரோடு இல்லாதவர்களை உயிரோடு கொண்டு வரப் போகிறார்கள் என்று ஆச்சரியம் இருக்கத்தான் செய்யும். ஒரு வேளை பொம்மையைப் போல, கார்டூனில் காட்டுவார்களோ என்றும் சிலர் நினைக்கிறார்கள்.

ஆனாலும் நிஜத்தில் பார்த்த விஜயகாந்த் போல அச்சு அசலாகக் கொஞ்சம் கூட வித்தியாசம் தெரியாத வகையில் தான் ஏஐ தொழில்நுட்பம் இருக்கப் போகிறதாம். அதற்காகத் தான் படம் ரிலீஸாவதும் தாமதமாகிறது. இதே போல இந்தியன் 2 படத்திலும் நடிகர் விவேக்கை ஏஐ தொழில்நுட்பத்தில் காட்டப்போவதாக ஏற்கனவே செய்திகள் வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News