அஜித் தூக்கி வச்சிருக்கும் குழந்தை இந்த சூப்பர் ஹிட் ஹீரோவா? எப்படி நடந்துச்சு?

பிரபல ஹீரோவை தூக்கி வச்சு கொண்டாடும் அஜித் ரசிகர்கள்..ஏன்னு தெரியுமா?

By :  rohini
Update: 2024-09-28 10:00 GMT

ajith

தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். தற்போது அஜித் தன் மடியில் ஒரு சிறுவனை தூக்கி வைத்திருக்கும் மாதிரியான புகைப்படம் இணையத்தில் வைலராகி வருகின்றது. அந்த சிறுவன் யார் என அனைவரும் கேட்டு வருகிறார்கள். இதற்கு மத்தியில் அதை பார்த்த அனைவரும் இது அட்டகத்தி தினேஷ் என்று கூறி வருகிறார்கள்.அஜித் தூக்கி வச்சிருக்கும் குழந்தை இந்த சூப்பர் ஹிட் ஹீரோவா? எப்படி நடந்துச்சு?அவர்கள் கூறிய பிறகுதான் முகத்தோற்றம் அட்டகத்தி தினேஷை ஒத்து இருப்பதாகவே தெரிகிறது.

அட்டகத்தி தினேஷ் அட்டகத்தி படத்தின் மூலம் பா. ரஞ்சித்தால் அறிமுகம் செய்யப்பட்டவர். ஆடிப் போனா ஆவணி பாடலை இன்று வரை யாராலும் மறக்க முடியாது. மிகவும் எதார்த்தமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர். தமிழ் சினிமாவில் மிக நன்றாக நடிக்க கூடியவர்களில் ஒரு சில பேரில் அட்டகத்தி தினேஷும் ஒருவர்.

கிடைக்கிற எல்லா படங்களிலும் நடிக்காமல் அவருக்கு அந்த படத்தில் எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறது? அந்தக் கதாபாத்திரம் எந்தளவு பேசப்படும் என்பதை புரிந்தே படங்களை தேர்வு செய்து வருகிறார் தினேஷ். அதுமட்டுமில்லாமல் நன்கு நடிக்கக் கூடியவர்களை தமிழ் சினிமா சரி வர பயன்படுத்துவதே இல்லை.

அந்த லிஸ்ட்டில் அட்டகத்தி தினேஷும் ஒருவர். பொதுவாக பெரிய பெரிய தயாரிப்பாளர்கள் பெரிய நடிகர்களை குறி வைத்தே போய்க் கொண்டிருக்கின்றனர். கதைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அந்த நடிகரால் எவ்வளவு லாபம் ஈட்டமுடியும் என்ற மன நிலையில்தான் இருக்கிறார்கள். அதனால்தான் பெரிய தயாரிப்பாளர் ரஜினி, விஜய், அஜித் இவர்களை குறி வைத்து வருகின்றனர்.

ரஜினி, விஜய், அஜித்தின் சமீபகால படங்களை பார்த்தால் கதைனு எதாவது இருந்ததா? எல்லாமே அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள், மாஸான சீன்களை வைத்தே படத்தை ஓட்டி வருமானம் பார்த்துவிட்டனர். அதை எல்லாவற்றையும் தாண்டி ஓப்பனிங். இந்த நடிகர்களுக்குத்தான் இப்போது ஓப்பனிங் இருந்து வருகிறது.




 அதனால் தான் தினேஷ் போன்ற நன்கு நடிக்கக் கூடியவர்களால் இன்னும் அந்த இடத்தை அடையமுடியவில்லை. ஆனால் நல்ல கதையில் நடித்திருக்கிறோம் என்ற ஒரு திருப்தி இருக்கும். அதனால் அட்டகத்தி தினேஷையா அஜித் தூக்கி வைத்திருக்கிறார் என அனைவரும் அந்த புகைப்படத்தை டேக் செய்து வைரலாக்கி வருகிறார்கள். இது எப்போது நடந்தது என்பதை தினேஷ் சொன்னால்தான் தெரியும். அட்டகத்தி தினேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றிப்படமாக மாறிய திரைப்படம் லப்பர் பந்து என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News