நூடுல்ஸ்க்கு பதிலாக இத்துப்போன இடியாப்பம்னு வச்சிருக்கலாம்!.. இப்படியா இம்சை பண்ணுவீங்க பாஸ்!..

இயக்குனர் அருவி மதன் இயக்கத்தில் பல படங்களில் வில்லனாக நடித்து வரும் ஹரிஷ் உத்தமன் இந்தப் படத்தில் ஹீரோவாக மாறி உள்ளார். அவருக்கு ஜோடியாக திரௌபதி படத்தில் நடித்த ஷீலா ராஜ்குமார் நடித்துள்ளார். சென்னையில் ஜிம் டிரைனர் ஆக வேலை பார்த்து வரும் சரவணன் கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் ஹரிஷ் உத்தமன் நடித்துள்ளார். மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வரும் ஹரிஷ் உத்தமன் வீட்டில் திடீரென எதிர்பாராத நபர் ஒருத்தர் நுழைய கைகலப்பில் அவரை ஷீலா ராஜ்குமார் […]

By :  Saranya M
Update: 2023-09-08 22:30 GMT

இயக்குனர் அருவி மதன் இயக்கத்தில் பல படங்களில் வில்லனாக நடித்து வரும் ஹரிஷ் உத்தமன் இந்தப் படத்தில் ஹீரோவாக மாறி உள்ளார். அவருக்கு ஜோடியாக திரௌபதி படத்தில் நடித்த ஷீலா ராஜ்குமார் நடித்துள்ளார்.

சென்னையில் ஜிம் டிரைனர் ஆக வேலை பார்த்து வரும் சரவணன் கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் ஹரிஷ் உத்தமன் நடித்துள்ளார். மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வரும் ஹரிஷ் உத்தமன் வீட்டில் திடீரென எதிர்பாராத நபர் ஒருத்தர் நுழைய கைகலப்பில் அவரை ஷீலா ராஜ்குமார் போட்டுத் தள்ளி விடுகிறார்.

இதையும் படிங்க: வாடகைத்தாய்க்கு பதிலா.. வாடகை அப்பா.. அனுஷ்காவுக்கு கைகொடுத்ததா மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி?..

மனைவியைக் காப்பாற்ற அந்த உடலை மறைக்க ஹரிஷ் உத்தமன் முயற்சி செய்யும்போது வீட்டிற்கு வில்லனான போலீஸ் அதிகாரி வேடத்தில் மதன் தட்சிணாமூர்த்தி வருவதும் அவரை சமாளித்து வெளியே அனுப்ப கணவன் மனைவி இருவரும் போராடுவதும் தான் இந்த படத்தின் கதை.

வெறும் நூடுல்ஸ் செய்யும் நேரத்தில் இயக்குனர் இந்த கதையை யோசித்து எழுதி விட்டாரா என்கிற கேள்விதான் ரசிகர்களுக்கு எழுகிறது. ஷார்ட் பிலிம் எடுப்பதற்கான கதையை வைத்துக்கொண்டு திரைப்படத்துக்கான திரைக்கதையை உருவாக்காமல் நீட்டி முழக்கி எந்த அளவுக்கு போர் அடிக்க முடியுமோ அந்த அளவுக்கு ஒரு படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

இதையும் படிங்க: ஆல் ஏரியாவுல அய்யா கில்லிடா!. 2 நாட்களில் இப்படியொரு வசூலா!.. பாக்ஸ் ஆபிஸ் சரவெடியாய் மாறிய ஜவான்!..

கதையில் எங்கேயும் சுவாரஸ்யமோ திகிலோ ரசிகர்களுக்கு ஏற்படவில்லை. ஆனால் திரையில் வருபவர்கள்தான் ஷாக்கை குறை ஷாக்க குறை என சொல்வது போல எந்த ஒரு சத்தம் கேட்டாலும் அதிர்ச்சி ரியாக்ஷனை மட்டுமே வெளிப்படுத்தி நடிக்கிறேன் என்கிற பெயரில் நம்மை நரக வேதனையில் ஆழ்த்துகின்றனர்.

படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் வரும் உணர்வுப்பூர்வமான அந்த ஒரு போர்ஷனுக்காக 2 மணி நேர இம்சையை சமாளிக்க முடிந்தால் தாராளமாக நூடுல்ஸ் படத்தை ஒருமுறை பார்க்க செல்லலாம். அருவி மதனுக்கு இயக்குனராக இன்னமும் பயிற்சி தேவை என்பது தெளிவாகத் தெரிகிறது. ஹரிஷ் உத்தமன் மற்றும் ஷீலா ராஜ்குமார் இயக்குனர் வாங்கிய வேலையை கச்சிதமாக செய்துள்ளனர். மற்றபடி படத்தில் பெரிதாக ஒன்றுமே இல்லை.

நூடுல்ஸ்: இடியாப்ப சிக்கல்

ரேட்டிங்; 2/5.

Tags:    

Similar News