அடடே! விஜய் ஒருத்தரு தானேப்பா… எத்தனை பேரு வெயிட்டிங்கில இருக்கீங்க?

தமிழ் சினிமாவில் தற்போது இருக்கும் மிக முக்கிய நடிகர்களில் தவர்க்க முடியாத இடத்தினை பிடித்து இருப்பவர் விஜய் தான். அவர் தற்போது நடிப்பு ஒரு பக்கம் அரசியல் எண்ட்ரி ஒருபக்கம் என பிஸியாக சுழன்று கொண்டு இருக்கிறார். தற்போது அவருக்கு ஒரு கூட்டமே வெயிட்டிங்கில் இருக்கும் தகவல்களும் வெளிவந்துள்ளது. லியோ படத்தினை விஜய் முடித்து விட்டார். இதனால் தற்போது முழுவீச்சாக வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் தளபதி68 பட வேளைகளில் இறங்கி இருக்கிறார். இப்படத்தின் லுக் […]

By :  Akhilan
Update: 2023-08-29 05:09 GMT

தமிழ் சினிமாவில் தற்போது இருக்கும் மிக முக்கிய நடிகர்களில் தவர்க்க முடியாத இடத்தினை பிடித்து இருப்பவர் விஜய் தான். அவர் தற்போது நடிப்பு ஒரு பக்கம் அரசியல் எண்ட்ரி ஒருபக்கம் என பிஸியாக சுழன்று கொண்டு இருக்கிறார். தற்போது அவருக்கு ஒரு கூட்டமே வெயிட்டிங்கில் இருக்கும் தகவல்களும் வெளிவந்துள்ளது.

லியோ படத்தினை விஜய் முடித்து விட்டார். இதனால் தற்போது முழுவீச்சாக வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் தளபதி68 பட வேளைகளில் இறங்கி இருக்கிறார். இப்படத்தின் லுக் டெஸ்டுக்காக சமீபத்தில் லண்டன் பறந்து இருக்கிறார் தளபதி.

இதையும் படிங்க : இதனாலதான் தமிழ் படங்களுக்கு தேசிய விருது கிடைக்கறது இல்ல!… இப்படிதான் தேர்வுகள் நடக்குமாம்!..

விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோதிகா மற்றும் பிரியங்கா மோகன் நாயகிகளாக நடிக்கலாம் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இப்படத்தினை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இப்படத்தினை முடித்து விட்டு தான் விஜய் அரசியலுக்கு நுழைய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

இந்நிலையில், லைகா தற்போது விஜயின் மகனை இயக்குனராக களமிறக்குகிறது. அவர்கள் கோலிவுட்டில் விஜயின் கத்தி மூலம் தான் எண்ட்ரி கொடுத்தனர். ஆனால் அந்த படத்துக்கு மிகப்பெரிய அளவில் எதிர்ப்பு வந்தது. இதை தொடர்ந்தே விஜய் லைகாவுடன் அடுத்தடுத்த படங்களில் இணையவே இல்லை. ஒருவேளை சஞ்சயிற்கு வாய்ப்பு கொடுத்தால் அடுத்து விஜயுடன் வாய்ப்பு கிடைக்கும் என்பது தான் லைகாவின் ப்ளானாக இருக்கலாம் என்கிறார்கள் சிலர்.

இதையும் படிங்க : ஹரோல்டு தாஸின் மகன் தான் லியோவா… வாவ் சொல்ல வைக்கும் லியோ சீக்ரெட்ஸ்! அடடா!

அடுத்து 99வது படத்தினை முடித்த சூப்பர்குட் பிலிம்ஸ் விஜயுடன் தான் 100வது படம் பண்ணுவோம் என்று உறுதியாக இருக்கிறார்கள். அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படுமா என்பதும் கேள்வி குறியாகவே இருக்கிறது. இல்லை விஜயின் ஆஸ்தான இயக்குனர் அட்லிக்கு அடுத்த படத்தினை இயக்க வாய்ப்பு கொடுக்கப்படலாம்.

அப்படி அட்லி அடுத்த விஜய் படத்தினை இயக்கினால் அந்த படத்தினை சன் பிக்சர்ஸ் தான் தயாரிக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது. இதற்கிடையில் விஜயின் அரசியல் எண்ட்ரி வேறு இருப்பதால் அடுத்தடுத்த சில ஆச்சரியமான அப்டேட்களே படையெடுக்க காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News