ஜூன் மாசத்துக்கு இப்படியொரு சென்டிமென்ட் இருக்கா?.. வரிசையா ஒவ்வொரு வருஷமும் சொல்லி அடிக்குதே!..

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு வெளியான படங்கள் பெரிதாக ஓடாத நிலையில் மே மாதம் வெளியான அரண்மனை 4 மற்றும் கருடன் படங்கள் வெற்றியை ருசித்தன. அதன் பின்னர் ஜூன் மாதம் 14-ஆம் தேதி விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமாக வெளியான மகாராஜா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இதுவரை 40 கோடி ரூபாய்க்கும் மேல் மகாராஜா திரைப்படம் வசூல் செய்து 50 கோடி ரூபாய் வசூலை நெருங்கிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நேற்று நடைபெற்ற […]

By :  Saranya M
Update: 2024-06-19 21:00 GMT

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு வெளியான படங்கள் பெரிதாக ஓடாத நிலையில் மே மாதம் வெளியான அரண்மனை 4 மற்றும் கருடன் படங்கள் வெற்றியை ருசித்தன. அதன் பின்னர் ஜூன் மாதம் 14-ஆம் தேதி விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமாக வெளியான மகாராஜா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

இதுவரை 40 கோடி ரூபாய்க்கும் மேல் மகாராஜா திரைப்படம் வசூல் செய்து 50 கோடி ரூபாய் வசூலை நெருங்கிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நேற்று நடைபெற்ற மகாராஜா படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய சினிமா வாழ்க்கை முடிந்து விட்டதாக பலரும் கூறினர். இனிமேல் தனக்கு வெற்றி கிடைக்காது என்றும் பேசினார்கள். ஆனால் அதற்கு எல்லாம் பதிலடியாக மகாராஜா படம் அமைந்துள்ளது என்றார்.

இதையும் படிங்க: கை நிறைய காசு! யாருக்கு கிடைக்கும்? மதி கெட்டுப் போய் கமல் படத்தில் மிஸ் செய்த பொன்னம்பலம்

ஜூன் மாதம் 14-ஆம் தேதி மகாராஜா திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், இதேபோல கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், காயத்ரி மற்றும் சூர்யா நடித்து வெளியான விக்ரம் திரைப்படம் ஜூன் மூன்றாம் தேதி வெளியானது. கமல்ஹாசனுக்கு பல வருடங்கள் கழித்து மிகப்பெரிய வெற்றி படமாக அந்த படம் அமைந்தது.

கடந்த ஆண்டு அசோக் செல்வனுக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக போர் தொழில் திரைப்படம் அமைந்தது குறிப்பிடத்தக்கது. ஜூன் 9-ஆம் தேதி கடந்த ஆண்டு போர் தொழில் திரைப்படம் வெளியானது.

இதையும் படிங்க:வேலையில்லா பட்டதாரி வாய்ப்பை அமலா பால் இப்படித்தான் வாங்கினாரா?.. விவாகரத்துக்கு அதுதான் காரணமா?..

அசோக்செல்வன் மற்றும் சரத்குமார் அந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தொடர்ந்து ஜூன் மாதம் நடிகர்களுக்கு வாழ்வில் மறக்க முடியாத வெற்றி படங்களை கொடுத்து வருகிறது. அடுத்தாண்டு இந்த ஜூன் மாதத்தை எந்த நடிகர் டார்கெட் செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Tags:    

Similar News